Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தாலம்மன் கோவிலில் ... நடராஜர், ஐம்பொன் உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை, கும்பாபிஷேக விழா நடராஜர், ஐம்பொன் உற்சவர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓரிக்கை மகா சுவாமி மண்டபம் வரும் 22ல் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஓரிக்கை மகா சுவாமி மண்டபம் வரும் 22ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
11:06

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் மணி மண்டபத்தில், நுாதன நந்தி மண்டபம் மற்றும் ராஜ கோபுரத்தின் மஹா கும்பாபிஷேக விழா, 22ல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மகா சுவாமிகளின் மணி மண்டபம், கருங்கற்களால் கட்டப்பட்டு, 2011ல் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.  இரண்டாவது கட்டமாக, 48 அடி உயரம் கொண்ட, முழுவதும் கருங்கல்லால் ஆன, ராஜ கோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், கலை நயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய, 16 கருங்கல் துாண்களுடன், 47 அடி நீளம், 42 அடி அகலம் கொண்ட நந்தி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 


அதன் நடுவில், 14.9 அடி நீளமும், 7 அடி அகலமும், 10 அடி உயரத்திற்கு கருங்கல்லால் ஆன, நந்தி ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. நந்தி மண்டபத்திற்கும், ராஜகோபுரத்திற்கும் இடையே, ஒரே கல்லால் ஆன, 50 அடி உயர தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின், மகா கும்பாபிஷேக விழா, 22ல், நடைபெறவுள்ளது.கும்பாபிஷேகத்தை ஒட்டி, 22ம் தேதி வரை தினமும் விசேஷ பாராயணம் நடைபெறுகிறது. வரும், 22, காலை, 8:15 மணிக்கு, ராஜகோபுர கும்பாபிஷேகமும், 9:12 மணிக்கு, நந்தி மண்டப கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான, ஏற்பாடுகளை, மகா லக் ஷ்மி மாத்ருபூதேச்வரர் அறக்கட்டளை அங்கத்தினர்களும், விதேய பக்த சிஷ்யர்களும் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar