Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை ஆனி திருமஞ்சன விழா: ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராவணன் சம்ஹாரம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயங்களில் ஆடல் வல்லானுக்கு ஆனித்திருமஞ்சனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவாலயங்களில் ஆடல் வல்லானுக்கு ஆனித்திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2018
10:06

திருப்பூர் : திருப்பூர் வட்டாரத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும், ஆனித்திருமஞ்சனம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமும், உச்சி காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவு பொழுது, ஆவணியாகவும், அர்த்தசாமம் புரட்டாசி மாதமாகவும் இருக்கும்.


இதில், ஆனி மற்றும் மார்கழி மாதமும் இறைவனை வணங்குவதற்கு ஏற்ற மாதங்களாக கருத்தப்படுகின்றன. உற்சவர் ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு, ஆண்டுக்கு ஆறு முறை அபிேஷகம் செய்யப்படுகிறது. அவ்வகையில், திருமஞ்சனம் நேற்று சிவாலயங்களில் நடந்தது. திருப்பூர், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அபிேஷக பிரியரான நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், நெய், சந்தனம், இளநீர் உட்பட 16 வகையான திரவியங்களில், மகா அபிேஷகம் நடந்தது. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில், நடராஜ பெருமான் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் ஆனித்திருமஞ்சன விழா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar