Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிவேதன மந்த்ரங்கள்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 12. நவராத்திரி பூஜை
நவராத்திரி பூஜை மஹிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
04:11

உலக மாதாவான அம்பிகையை வழிபடும் விரதமே நவராத்திரி விரதம், வடநாட்டில், குறிப்பாக வங்காளத்தில் இதனை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ருதுக்களில் வசந்த ருது (காலம்), சரத் ருது என்னும் இரண்டு ருதுக்களும் மனிதர்களுக்கு நோயை விளைவித்துத் துன்பத்தை உண்டாக்கும். ஆதலால், இந்த இரண்டு காலங்களும் யமனுடைய இரண்டு கோரைப் பற்களுக்குச் சமம் என ஞான நூல்கள் கூறுகின்றன. எனவே, அவற்றிடமிருந்து விடுபடுவதற்காக நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். விரதம் இருப்பவர் சுகமான தூக்கத்தைத் தவிர்த்து தரையில் படுத்துத் தூங்க வேண்டும். 9 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி இந்த மூன்று நாட்களும் விரதமிருந்து பூஜை செய்தால் 9 நாட்களும் பூஜை செய்த பலன் கிடைக்கும். நவராத்திரி இரண்டு வகைப்படும். ஒன்று வசந்த ருது: சித்திரை மாத வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்கள் கொண்டது. இது வசந்த நவராத்திரி எனப்படுகிறது. இரண்டாவது, சரத்ருது: புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்கள் கொண்டது. இதை சாரதா நவராத்திரி எனவும் கூறப்படும். இரண்டாவது நவராத்திரியே நாம் விமரிசையாகக் கொண்டாடும் நவராத்திரி ஆகும்.

முறை

இந்த விரதம் 9 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதால் நவராத்திரி என்றும், சில இடங்களில் பத்துநாட்கள் கொண்டாடப்படுவதால், ‘தசராத்திரி ’ ‘தசரா ’ என்றும் வழங்கப்படும். இந்த விரதத்தைத் தொடங்கும் முன் அமாவாசை அன்றே விரதத்திற்கு வேண்டிய பொருட்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு, பிரதமை முதல் நவமி வரையில் ஒன்பது நாட்களும் பூஜை செய்ய வேண்டும். அம்பிகையை பிம்பத்தில், அல்லது கும்பத்தில் எழுந்தருளச் செய்து முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இந்த நாட்களில் தினந்தோறும் காலையில் எழுந்து நீராடி, நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு சுமங்கலிகளுக்குள் அம்பிகை இருப்பதாக பாவனை செய்து அவர்களைப் பூஜை செய்து அவர்களுக்கு ஆடை, ஆபரணம், உணவு முதலியவை தந்து அவர்களைத் திருப்தி செய்ய வேண்டும்.

அம்பிகையை முதல் மூன்று நாட்களில் துர்க்கையாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியாகவும் பூஜை செய்கிறோம். ஒரே ஸ்விட்ச்சிலிருந்து பெறும் மின்சாரத்தை எப்படிப் பலவகைகளில் உபயோகித்து பலன் பெறுகிறோமோ, அதுபோல ஒன்றேயான சக்தியைப் பலவழிகளில் வழிபட்டுப் பலன் அடைந்து, நன்றியோடு பக்தி கொண்டு நாம் வழிபடுவதே நவராத்திரி, சரஸ்வதி பூஜையுடன் பூர்த்தி ஆவதால், சரஸ்வதி பூஜை என்றும், கடைசி நாளில் ஆயுதங்களை வைத்துப் பூஜை செய்வதால் ஆயுத பூஜை என்றும் வழங்கி வருவது கண்கூடு.

முதல் மூன்று நாட்கள் தேகத்தில் சக்தியும், மனதில் தைரியமும், தீர்க்காயுளும், துக்கமில்லாத வாழ்வும் வேண்டிகுமாரி, திரி மூர்த்தி, கல்யாணி என்று வரித்து அம்பிகையை பூஜிக்க வேண்டும். அடுத்து வரும் மூன்று நாட்களில் ரோகிணி, காளி, சண்டிகை என்று ஆவாஹித்து தேவியை வழிபட வேண்டும். இது ஐஸ்வர்யத்தையும், தாம்பத்ய ஒற்றுமையையும் தருவதோடு பணத்தால் ஏற்படும் பிரச்னைகளையும் அகற்றும். கடைசி மூன்று நாட்களில் சாம்பவி, துர்க்கா, சுபத்ரா என்று பெயரிட்டு அம்பாளை ஆராதித்தால் சகல கலைகளும், ஞானமும், கல்வியும், வித்தைகளும் விருத்தியாகும்.

ஒன்பது நாட்களும் பூஜிக்க முடியாது போனால் துர்க்காஷ்டமி, மகாநவமி, விஜயதசமி இந்த மூன்று நாட்களிலுமாவது முப்பெரும் தேவியரை ஆராதிக்க வேண்டும். நவராத்திரி சமயத்தில் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம், தாம்பூலம், பூ, கண்ணாடி, சீப்பு, வளையல், தேங்காய், ரவிக்கைத் துணி இவற்றை வைத்துக் கொடுப்பதால் சவுபாக்கியம் பெருகும். தினமும் ஒரு கன்னிகை அல்லது ஒரு சுமங்கலிக்காவது மங்களப் பொருட்களைத் தானம் செய்ய வேண்டும். நவராத்திரி வெள்ளிக்கிழமையில் ஒரு சுமங்கலிக்காவது நலங்கு மஞ்சளிட்டு உணவளிப்பது வாழ்க்கையில் சுபிட்சத்தைக் கொடுக்கும் தினமும் தேவி ஸ்தோத்திரங்களைச் சொல்லி வர வேண்டும். அம்பிகை சங்கீதப் பிரியை. ஆதலால் ஒரு பாட்டாவது பாட வேண்டும் அல்லது கொலுவுக்கு வருபவர்களைப் பாடவைக்க வேண்டும். ஒன்பது நாட்களும் நவதானியங்களாலான சுண்டலை நிவேதித்து விநியோகிப்பது விசேஷம்.

அம்பிகையை வழிபட்டுப் பேறு பெற்றோர்; விச்வாமித்ரர், காளிதாசர், அபிராமிபட்டர், ஸ்ரீநிவாசப் புலவர், பிரம்மா, விஷ்ணு, முதலிய பலர். ராமர் நவராத்திரி விரதத்தை அனுஷ்டானம் செய்துதான் ராவண சம்ஹாரம் செய்து சீதையை அடைந்ததாக தேவிபாகவதம் கூறுகிறது. அனுஷ்டானம் செய்யும் முறை எந்த வகையாக இருந்தாலும், அம்பிகையை இந்த நவராத்திரி நாட்களில் பக்தி சிரத்தையுடன் பூஜை செய்து அம்பிகையின் அருளைப் பெறுவோமாக.

நவராத்திரி பூஜை

காலம்: பொதுவாக புரட்டாசி மாதத்தில் சுக்லபக்ஷ ப்ரதமை தினத்தன்று நவராத்திரி பூஜையை தொடங்கி நவமி வரையில் ஒன்பது தினங்கள் தேவியை துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி ஸ்வரூபத்தில் நாள்தோறும் பூஜை செய்யவும்.

1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள்


பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. அம்பிகையை பிம்பத்திலோ அல்லது கும்பத்திலோ ஆவாஹித்து அலங்கரித்து வைக்கவும்.

ஆத்ம பூஜா

தேஹோ தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜே  தஜ்ஞான  நிர்மால்யம் ஸோஹம் பாவேன பூஜயேக்
(அக்ஷதையை தன் மீது போட்டுக்கொள்ளவும்)

பீட பூஜா

(ஐந்து தேவதைகளை வைத்துள்ள தாம்பாளம்/ கோலம் ஆகியவற்றின் மீது புஷ்ப அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

ஓம் ஸகல  குணாத்ம  ச ’க்தியுக்தாய யோக பீடாத்மனே நம:
ஆதாரச ’க்த்யை நம: மூலப்ரக்ருத்யை நம:
ஆதிவராஹாய நம: ஆதி கூர்மாய நம: அனந்தாய நம:
ப்ருதிவ்யை நம: ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
தச ’திக்பாலேப்யோ நம:

த்யானம்

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவீம் கவீனாமுபமச் ’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆன: ச்’ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்
மஹா கணபதிம் த்யாயாமி ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை கணபதியிடம் ஸமர்ப்பிக்கவும்)

ஆஸத்யேன ரஜஸா வர்த்தமானோ
நிவேச ’யன்னம்ருதம் மர்த்யஞ்ச
ஹிரண்யயேன ஸவிதாரதேனா
தேவோயாதி புவனா விபச்’யன்
ச்சாயா தேவீ ஸமேத ஸூர்ய நாராயணம்
த்யாயாமி ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை சூர்யனிடம் ஸமர்பிக்கவும்)

ஸஹஸ்ர சீ’ர்ஷா புருஷ:
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
ஸ பூமிம் விச் ’வதோ வ்ருத்வா
அத்யதிஷ்ட்டத்தசா’ங்குலம்
பூமி நீளா ஸமேத ஸ்ரீமஹாவிஷ்ணும்
த்யாயாமி ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை விஷ்ணுவிடம் ஸமர்ப்பிக்கவும்)

கௌரீ மிமாய ஸலிலானி
தக்ஷத்யேகபதீ த்விபதீ ஸா சதுஷ்பதீ
அஷ்டாபதீ நவபதீ பூபவுஷீ
ஸஹஸ்ராக்ஷரா பரமே வ்யோமன்
கௌரீம் த்யாயாமி ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை ஸ்ரீதேவியிடம் ஸமர்ப்பிக்கவும்)

த்ரியம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர்  முக்ஷீய மாம்ருதாத்
ஸ்ரீசாம்ப பரமேச்’ரம் த்யாயாமி ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை ஸ்ரீபரமேச்’வரரிடம் ஸமர்ப்பிக்கவும்)

3. நைவேத்ய பொருட்கள்: சாதம், சர்க்கரைப் பொங்கல், பாயஸம், வடை, நெய் அப்பம், சுண்டல், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு

4. குங்குமத்தாலும், பல்வேறு புஷ்பங்களாலும் அர்ச்சனை செய்வது விசேஷம்.

5. ஆண்களும், பெண்களும் இப்பூஜையைச் செய்யலாம்.

6. பெண்களுக்கு பிராணாயாமம் கிடையாது.

1. பூர்வாங்க பூஜைகள்

முதலில் பக்கம் 10 பக்கம் முதல் பக்கம் 14ம் பக்கம் வரை உள்ள (தீபம் + ஆசமனம் + குரு த்யானம் +கணபதி  தியானம் + ப்ராணாயாமம் + ஸங்கல்பம் + ஆஸன பூஜை + ஆத்ம பூஜை) பூர்வாங்க பூஜைகளைச் செய்யவும்.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

2. ஸ்ரீ. விக்னேச்வர பூஜை
(மஞ்சள் பிள்ளையார்)

ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் விக்னேச்வர பூஜையை செய்ய வேண்டும்

(தியானம் + ஸங்கல்பம் + ப்ரார்த்தனை + அர்ச்சனை + நிவேதன மந்த்ரங்கள் + தீபாராதனை + நமஸ்காரம்)

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 12. நவராத்திரி பூஜை »
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் ... மேலும்
 
(யதாஸ்தானம்)அகஜானன............உபாஸ்மஹே (பக்கம் 32)அகஜானன பத்மார்க்கம்கஜானனம் அகர்நிஷம்அனேகதம்தம் ... மேலும்
 
(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)ஓம் துர்க்காயை        நம: பாதௌ       ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar