Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விக்னேச்’வர உத்யாபனம்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 26. காரடையான் நோன்பு
26. காரடையான் நோன்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
04:11

சாவித்ரி பாடம் என்பது கர்ண பரம்பரையாக ஆதரிக்கப்பட்டு இன்றும் உயிரோடிருக்கும் பாட்டுகளுள் முக்கியமான ஒன்று. இதில் அச்வபதி என்னும் அரசனுக்குத் தவப்பெண்ணாய்ப் பிறந்த சாவித்திரி என்பவள் பிரமன் எழுத்துப்படி பங்குனி மாதம் முதல் தேதி இறந்து போன தன் கணவர் சத்தியவான் என்பவர் உயிரைத் தான் செய்த கவுரீ பூஜையின் பலத்தினாலும் தன் சாமர்த்தியத்தினாலும் மீட்டுக் கொண்டதோடு முக்கியமான சில வரங்களையும் எமதர்மராஜனிடத்திலேயே பெற்றதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாவித்திரி செய்த கவுரீ நோன்பு மாசியும்  பங்குனியும் கூடும் வேளையில் செய்யப்படும். இந்த மாசி  பங்குனி நோன்பென்பது நம்முடைய தேசத்தில் எல்லாச் சுமங்கலிகளாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால் காரடையான் நோன்பு என்று இதை விசேஷமாய்ச் சொல்வது வழக்கம். சாவித்திரி காட்டில் வசித்துக் கொண்டிருந்ததனால் காரரிசியும் துவரையுந்தான் கிடைத்திருக்கலாம் போலும். நிவேதனம் செய்யும்பொது “உருகாத வெண்ணெயும் ஓரடையும் வைத்தேன். ஒருக்காலுமே என் கணவர் பிரியாதிருக்க வேணும் ” என்ற வேண்டிக்கொள்வார்கள்.

பூஜை அறையில் கோலமிட்டு, சிறிய நுனிவாழை இலை போட்டு, இலை நுனியில் வெற்றிலை, பாக்கு வாழைப் பழம், மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணெயும் வைக்கவேண்டும். முதிர்ந்த சுமங்கலி தன் இலையில் அம்பிகைக்கு ஒரு சரடு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று இலை போடக் கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக் கொண்ட பின், மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களை சாப்பிடச் சொல்லலாம். தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரடை அணிவித்த பின் இளைய மங்கையருக்கு முதலிய சுமங்கலிகள் சரடு கட்ட வேண்டும். பிறகு தானும் கட்டிக் கொண்டு அம்பிகையை நமஸ்கரித்த பிறகு அடையை சாப்பிடலாம். நோன்பு ஆரம்பித்தது முதல் முடிக்கும் வரை தீபம் எரிய வேண்டியது முக்கியமானது.

மாசி முழுவதும் போகுமுன் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் குழந்தைகள் உடல் நலம் குன்றியவர்கள் எளிய பலகாரம் சாப்பிடலாம். மற்றவர்கள் பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். நோன்பு நோற்ற பின்னும் அடைதான் சாப்பிடலாம். மறுநாள் சூரியோதயத்திற்கு முன் பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும். நோன்பு தினத்தில் சாவித்திரி சரித்திரம் படிப்பது விசேஷம்.

வாணலியின் அடியில் வைக்கோலைப் போட்டு மேலே தட்டில் அடையை வேகவைப்பார்கள். அதன் பொருள் நெல், கதிரிலிருந்து பிரியும் வரை காப்பு வைக்கோல் “சத்தியவான் உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டது. உயிரை மீட்டுக்கொண்டு வரும் வரை உடலைக் காத்திரு ” என்று சொல்லி வைக்கோலால் மூடிவிட்டுப் போனாள் சாவித்திரி. அதன் அடையாளமாகத்தான் வைக்கோல் போடுகிறோம். “ருசிக்காக உப்புப் போட்டும் அடை தட்டிக் கொள்ளலாம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்கள்நல்ல குணவானுக்கு மாலையிட்டு சீரும் சிறப்புமாய் வாழ்வர்.

மற்றைய நோன்புகளுக்குக் கையில் சரடு கட்டிக் கொள்வது வழக்கமாயிருக்க இதற்கு மாத்திரம் சரட்டில் மஞ்சள் சேர்த்துக் கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பின் முக்கிய பலன் தீர்க்க சவுமாங்கல்யம் இந்தச் சாவித்திரி சரித்திரத்தை செவ்வாய்க்கிழமை, வெள்ளில்கிழமை தவறாமல் சொல்லுகிற, அல்லது சொல்லக் கேட்கிற சுமங்கலிகளுக்கு அவ்வப்பொழுது மாங்கலிய பலம் வளருமாம். இதனை மகத்துவம் வாய்ந்த இப்புராணக் கதையை பாராயணஞ் செய்து மகாதேவியின் கிருபையை யாவரும் அடைவார்களாக.

ஸ்ரீ காமாக்ஷீ பூஜை

காலம்: மாசி மாதம் காரடையான் நோன்பு என பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ள தினத்தன்று (மாசியும், பங்குனியும் கூடுகிற நேரத்தில் ) காமாக்ஷி பூஜையைச் செய்ய வேண்டும். நோன்பு கயிறு கட்டிக் கொள்ள நல்ல நேரம் அப்போதைய பஞ்சாங்கத்தில் சொல்லியுள்ளபடி பார்த்து, தெரிந்து கட்டிக்கொள்ளவும்.

பலன்:

1. கணவன் ஆரோக்யமாய் இருக்க தீர்க்க ஆயுளாய் இருக்க.
2. மனைவி தீர்க்க சுமங்கலியாய் இருக்க.

பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:

1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. வரலக்ஷ்மீ வ்ரத பூஜையைபோல் ஒரு கும்பத்தை அலங்கரித்து, மாவிலை, தேங்காய் வைத்து,  காமாக்ஷியாகக் கருதி அதில் பூஜை செய்ய வேண்டும்.

3. நைவேத்ய பொருட்கள்: வெல்ல அடை, கார அடை, பாயஸம், வெண்ணெய், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே


சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ஸங்கல்பம்

(ஸங்கல்பத்தின் முழுவிபரம் அறிய (பக்கம் 52) பார்க்கவும்.

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, ச ’காப்தே அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, *.... நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே, சி’சி’ர ருதௌ, கும்பமாஸே, சு’க்ல பக்ஷே, *....யாம் சு’பதிதௌ, *..... வாஸர யுக்தாயாம், *......நக்ஷத்ர யுக்தாயாம், ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் *.......யாம் சு’பதிதௌ.

மம தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம் மம பர்த்துச் ’ச அன்யோன்ய ப்ரீதி புரஸ்ஸரம் அவியோகார்த்தம், ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே ததங்கம் கலச ’ பூஜாம் ச கரிஷ்யே 

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 26. காரடையான் நோன்பு »
விக்னேச்’வர உத்யாபனம் (யதாஸ்தானம்)அகஜானன............உபாஸ்மஹேஅகஜானன பத்மார்க்கம்கஜானனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar