Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலகளந்த பெருமாள் கோவிலில் மோகன ... அய்யப்பனுக்கு மலர் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோவில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
01:12

ஊட்டி:ஊட்டி ஐயப்பன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஊட்டி ஐயப்பன் கோவிலில், நடப்பாண்டின், 64வது தேர் திருவிழா கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், அத்தாழ பூஜை, ஸ்ரீ பூதபலி, கணபதி ஹோமம், உஷ பூஜை நடந்தது. இதன் தேரோட்ட நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது. ஊட்டி டவுன் டி.எஸ்.பி., திருமேனி துவக்கி வைத்தார்.பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். செண்டை மேளம் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர், மாலையில் ஐயப்பன் கோவிலை வந்தடைந்தது. நிறமாலை பூஜையுடன் திருவிழா நிறைவு பெற்றது.*குன்னுார் வெலிங்டன் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில், 32வது ஆண்டு மண்டல மகோற்சவ விழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு ஒசட்டி சந்தான வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பால்குட ஊர்வலம் துவங்கி பாய்ஸ்கம்பெனி, பிளாக்பிரிட்ஜ் வழியாக கோவிலை அடைந்தது. ஐயப்பனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது.*அருவங்காடு ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்ன தானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar