தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், அமாவாசை பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2019 03:01
கன்னிவாடி:தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.
விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமி கோயில், ஆத்தூர் காசி விசுவநாதர் கோயில், அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில்களில் அமாவாசை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.