ஒட்டன்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்காக தயாரான நங்காஞ்சியாற்று பாலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2019 03:01
ஒட்டன்சத்திரம்:பழநிக்கு செல்லும் பக்தர்கள் செல்ல வசதியாக நங்காஞ்சியாற்று பாலம் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
திண்டுக்கல் பழநி தேசிய நெடுஞ்சாலையில், ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் நங்காஞ்சியாற்று பாலம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டப்பட்டதால் பழைய பாலம் பயன்பாடின்றி, செடி கொடிகள், முட்கள் முளைத்து புதர் போல் காணப் பட்டது.பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வது வழக்கம்.
இவர்களின் வசதிக்காக பழைய பாலத்தை பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மதுரை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகர் அறிவுறுத்தினார்.இதனை தொடர்ந்து பழநி கோட்டப் பொறியாளர் ரமேஷ் வழிகாட்டுதல்படி ஒட்டன்சத்திரம் உதவி கோட்டப் பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஜெயபாலன் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பாலத்தை சுத்தப் படுத்தி பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.