பதிவு செய்த நாள்
14
ஜன
2019
02:01
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகரில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. மார்கழி முழுவதும் காலை, 4:00 மணி முதல் சிறப்பு வழிபாடும், பஜனையும் நடந்து வருகிறது. நேற்று (ஜன., 13ல்) ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இருந்து, வேத வியாசர் பத்ரி நாராயண பட்டர் சுவாமிகள் வருகை தந்தார். இவரை பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் மற்றும் ராமானுஜருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. பின்னர், வேத வியாசர் பத்ரி நாராயண பட்டர் அருளாசி வழங்கி பேசுகையில், தினமும் நாம் வழக்கமான பணிகளை செய்வது போல், கோவிலுக்கு சென்று சுவாமியை வணங்க நேரம் ஒதுக்க வேண்டும். ஆழ்வார்கள், 11 பேர் இருந்தாலும், மார்கழி மாதம் என்றால் அது ஆண்டாளுக்கு உகந்த மாதம் என்றாகிவிட்டது. இதற்கு காரணம், சிறு வயது முதலே பெருமாளை தவமாக எண்ணி ஆண்டாள் வணங்க துவங்கியதுதான், என்றார்.