காரைக்கால் நித்ய கல்யாணபெருமாள் கோவில் திருக்கல்யாணம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2019 12:03
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாணபெருமாள் கோவில் மகோத்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண மகோத்சவ விழா நடந்தது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலையில் மணமக்கள் கோலத்தில் எழுந்தருளிய நித்ய கல்யாண பெருமாள் மற்றும் ரங்கநாயகி தாயாருக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.