கண்டாச்சிபுரம் அருகே, முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2019 03:04
கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் அருகே, முருகன் கோவிலில் கிருத்திகை உற்சவம் நடைபெற்றது. கண்டாச்சிபுரம் வெற்றிவேல் குன்றம் பகுதியில் அமைந்துள்ள சக்திவேல் முருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி, நேற்று (ஏப்., 8ல்) இரவு 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.