ராணிப்பேட்டையில் 1,000 ஆண்டு பழமையான அனுமன் சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2019 03:04
ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மிஸ்ரி நகரில், பரஞ்சோதி என்பவர் வீடு கட்டிக் கொண்டுள்ளார். இதற்காக நேற்று (ஏப்., 8ல்) அஸ்திவாரம் தோண்டும் பணிகள் நடந்தன. அப்போது குழியில், இரண்டு அடி சிலை ஒன்று கிடைத்துள்ளது. இதனால், பள்ளம் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு சிலை மீட்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை வருவாய்த்துறையினர் அந்த சிலையை ஆய்வு செய்தனர். அதில், 1,000 ஆண்டு பழமையான சோழர் கால யோக அனுமன் கல் சிலை என்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த சிலைக்கு மஹா ப்ரத்தியங்கிரா தேவி கோவிலில் உள்ள மணி சுவாமி பாலாபிஷேகம் செய்த பின், பொதுமக்கள் வழிபட்டனர். பின்னர் ராணிப்பேட்டை தாசில்தார் ரூபியிடம் அந்த சிலை ஒப்படைக்கப்பட்டது. அவர், வேலூர் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.