பதிவு செய்த நாள்
30
ஏப்
2019
12:04
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில், மரகதவல்லி அம்பாள் சமேத நரசிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு, நேற்று (ஏப்., 29ல்) காலை, 7:30 மணிக்கு, மூலவர் விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, தொடர்ந்து விநாயகர், பஞ்ச மூர்த்திகள் சன்னிதி விமானத்திற்கு கும்பாபிஷே கம் நடந்தது.இரவு, 7:00 மணிக்கு, மரகதவல்லி அம்பாள் நரசிங்கேஸ்வரர், திருக்கல்யாணம் நிகழ்ச்சி முடிந்ததும், சுவாமி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.