பதிவு செய்த நாள்
30
ஏப்
2019
12:04
வீரபாண்டி: நான்கு கோவில்களின் திருவிழா ஒரே நாளில் நடந்ததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர்.
ஆட்டையாம்பட்டி ஐய்யாங்குடிகாடு, பஸ் ஸ்டாண்ட் பின்புற பகுதிகளில் உள்ள நல்லபுள்ளி அம்மனை, குல தெய்வமாக வழிபடுபவர்களின் ராயமுனியப்பன், ஐயனாரப்பன், செல்லியம் மன் மற்றும் பெரியாண்டிச்சி அம்மன் ஆகிய நான்கு கோவில்களில் நேற்று (ஏப்., 29ல்) திருவிழா நடந்தது.
இதற்காக நேற்று முன்தினம் (ஏப்., 28ல்) இரவு, கோவில் வீடுகளில் இருந்து பூஜை கூடைகளை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். நேற்று (ஏப்., 29ல்) அதிகாலை, 2:00 மணிக்கு விநாயகர் மற்றும் நல்லபுள்ளி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். முதலில் ஐயனாரப்பன் அடுத்து செல்லியம்மன், ராய முனியப்பன் இறுதியாக பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.