அலங்காநல்லூர் : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை வைகையாற்றில் இறங்க சென்ற கள்ளழகர் ஏப்., 23 அழகர்கோவில் திரும்பினார்.
திருவிழாவின் போது பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 27 உண்டியல் பெட்டிகள் கள்ளழகருடன் மதுரை சென்று கோயிலுக்கு திரும்பின. இந்த உண்டியல்கள் மற்றும் கோயிலிலுள்ள நிரந்தர உண்டியல்கள் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டன.
இதில் 126 கிராம் தங்கம், 469 கிராம் வெள்ளி, 97 லட்சத்து 41 ஆயிரத்து 843 ரூபாய் மற்றும் வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன. உண்டியல் எண்ணும் பணியில் ஐயப்ப சேவா சங்கத்தினர், கோயில் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டனர். நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி அனிதா, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப் பாளர்கள் உடனிருந்தனர்.