பதிவு செய்த நாள்
14
ஆக
2019
03:08
ஊவேரி:ஊவேரி சத்திரம், மாரியம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் திருவிழா, நேற்று 13ம் தேதி, கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரிசத்திரம் கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஆடி திருவிழா நடத்துவது வழக்கம்.நடப்பாண்டு, ஆடி திருவிழாவை முன்னிட்டு, 11ம் தேதி, கிராம தேவிக்கு, பெண்கள் பொங்கலிட்டனர்.நேற்று 13ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பகல், 1:00 மணிக்கு கூழ் வார்த்தல் நடந்தது. இரவு, மலர் அலங்காரத்தில், அம்மன் வீதியுலா வந்தார்.