பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பிய முருகன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2019 11:09
திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்பதற்காக செப்.,7ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புறப்பாடாகினர். திருவிழா முடிந்து, செப்.,12ல் மதுரை சுவாமிகளிடம் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை நெல்பேட்டை பகுதியிலுள்ள மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். அங்கு அபிஷேகம், பூஜை முடிந்து சர்வ அலங்காரமாகி பூப்பல்லக்கில் சுவாமி, தெய்வானை திருப்பரங்குன்றம் கோயில் வந்தடைந்தனர்.