ராமாபுரம், ராமாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ரத உற்சவம் மற்றும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ராமாபுரம், லட்சுமி நகரசிம்ம பெருமாள் கோவில் தெருவில், அமிர்தவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், 1,200 ஆண்டுகளுக்கு முன் பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்ம வர்மனால் நிர்மாணிக்கப்பட்டது.இக்கோவிலில், 28ம் ஆண்டு ஆனி பிரம்மோற்சவ விழா, 6ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், நேற்று காலை 9:00 மணிக்கு சிம்ம லக்னத்தில் ரத பிரதிஷ்டை திருத்தேர் ரத உற்சவம் நடைபெற்றது. பின், மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.இன்று காலை 8:30 மணிக்கு, வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலம் பல்லக்கு மற்றும் மாலை 6:30 மணிக்கு குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெற உள்ளது.