காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா குருத்தோலை ஞாயிறு பவனி



காரைக்குடி: காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் குருத்து ஞாயிறு பவனி நடந்தது.

பங்குத்தந்தை எட்வின் ராயன் உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜா திருத்தொண்டர் மரிய அந்தோணி ராஜ் ஆகியோர் புனித நீரால் அர்ச்சித்து பவனியை தொடங்கி வைத்தனர். முன்னாள் பீடச் சிறுவர்கள் சிலுவையினை கையில் ஏந்தியபடி தொடங்கிய பவனியானது, அம்பேத்கர் சிலை தொடங்கி செக்காலை ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. திருப்பலியில் சிவகங்கை மறைமாவட்டம் வியானி அருட்பணி நிலையத்தில் குடும்ப நல வாழ்வு பணியச் செயலாளர் ஜாலி மரி வளன் கலந்துகொண்டு மறையுரையாற்றினார். காரைக்குடி செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலய பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, அரியக்குடி வளன் நகர் குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தை ஜோசப் சகாயராஜ், ஆவுடைப்பொய்கை புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ராஜமாணிக்கம், மானகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை ஜூடு அந்தோணி ஆகியோர் குருத்து ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றினர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்