உலக நன்மைக்காக ஜோதிர்லிங்க தரிசனம் தமிழக ஆதீனங்கள் பங்கேற்பு



திருப்பூர்; உலக மக்கள் நலன் வேண்டி தமிழக ஆன்மிக பெரியோர்கள் ஜோதிர்லிங்க தலங்களில் ருத்ராபிேஷகம் நடத்தினர்.


சைலாபுரி ஆதீன திருமடத்தின் ஏற்பாட்டில், உலக நன்மை வேண்டியும், நம் நாடு செழிப்புறவும் வேண்டி ஜோதிர்லிங்க தலங்களில், ஏகாதச ருத்ர யாகம் ருத்ராபிஷேகம் மற்றும் யாக பூஜை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், கடந்த 29ம் தேதி முதல் 6ம் தேதி வரை, நான்கு ஜோதிர்லிங்க தலங்களில் இந்த சிறப்பு பூஜை நடந்தது. ம.பி., மாநிலம், உஜ்ஜயினியில், மகா காலேஸ்வரர் கோவில், ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்கம், குஜராத் சோமநாதர் கோவில், குஜராத் தாலுகாவனம் நாகேஸ்வரர் கோவில் ஆகிய நான்கு ஜோதிர்லிங்க கோவில்களில், ஏகாதச ருத்ராபிஷேக பூஜை, 12 யாக குண்டங்கள் அமைத்து அனைத்து கோவில்களிலும் தலா இரண்டு நாள் நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம் கயிலை மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், உஜ்ஜயினி மகாகாலேஸ்வர ஜோதிடர் லிங்க பகவானுக்கு ருத்ராபிஷேகம் செய்தார். அவருடன், திருப்பூர் ஸ்ரீ சக்தி பீடம், சத்யா சிவாச்சாரியார் சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமிகள், காயத்ரி பீடம் பூபதி சுவாமிகள், கோவை குபேர பீடம் டாக்டர் ஆனந்த் ராம், சோடசி பாலா பீடம் கார்த்தி சுவாமிகள், அதிர்ஷ்ட லட்சுமி தண்டபாணி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நான்கு ஜோதிர்லிங்க கோவில்களிலும், சைலாபுரி ஆதீனம் கோவிந்தராஜ் சுவாமிகள், திருப்பூர் சக்தி பீடம் சத்யா சிவாச்சாரியார் சுவாமிகள் ருத்ர யாகம், மகாருத்ராபிஷேகம் நடத்தினர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்