திருவொற்றியூர்; மார்கழி மாதத்தை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும் நிலையில் சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் தினமும் பக்தர்கள் இந்த மாதம் முழுவதும் விரதமிருந்து திருப்பாவை பெருமாள் உள்ளிட்ட பாசுரங்களை பாடி வந்த நிலையில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளே கோவிந்தா என சாமி தரிசனம் செய்தனர்.
சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது உற்சவர் ஸ்ரீ பவள வண்ணப் பெருமாள் பிரம்மாண்டமாக வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதிகாலை எழுந்தருளி காட்சி அளித்தார் திருப்பாவை பாடல் பாடிய பின் பெருமாள் சன்னதியில் இருந்து சொர்க்கவாசல் வழியாக நுழைந்து நம்மாழ் வாருக்கு ஜடாரி பகுமானம் செய்து பரிவட்டம் கட்டி ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வை காண உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கோவில் பகுதிக்கு வருகை தந்து சொர்க்கவாசல் வழியாக வந்து சாமி கோவிந்தா பெருமாளே கோவிந்தா என பக்த முழக்கம் இட்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். அதிகாலையில் பக்த்தர்கள் கூட்டம் அலை மோதி காணப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.