பழநி; பழநி, இடும்பன் மலையில் பெருந்திட்ட வரைவு மூலம் கட்டப்படும் நிழல் மண்ட உங்களுக்கு கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல வின்ச் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பழநி முருகன் கோயில் அருகே இடும்பன் மலை உள்ளது இங்கு 540 படிகள் உள்ளன. மலைமீது 13அடி உயரம் உள்ள இடும்பன் சிலை உள்ளது, விநாயகர், அகத்தியர் வள்ளி தெய்வானை முருகனுடன் சிலைகள் உள்ளன. தைப்பூச மற்றும் பங்குனி உத்திர நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் இங்கு சென்று வழிபட்டு வருகின்றனர். தற்போது தமிழக அரசு சார்பில் பழநி கோயில் பெருந்திட்டவரைவு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஐந்து நிழல் மண்டபங்கள் அமைக்கும் பணி, இடும்பன் மலை படிப்பாதையில் நடைபெறுகிறது. நிழல் மண்டபங்கள் அமைக்கும் கட்டுமான பணிகளுக்காண பொருட்களை எடுத்துச் செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இடும்பன்மலையில் வின்ச் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படும்.
இதுகுறித்து கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து கூறுகையில்; "வின்ச் பணிகள் கட்டுமான பொருட்களை எளிதாக கொண்டு சென்று விரைவில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இடும்பன் மலைக்கு பழநி முருகன் கோயில் மலையில் இருந்து ரோப் கார் அமைக்கும் திட்டம் தனியாக செயல்படுகிறது. இதற்கு மத்திய அரசு நிறுவனம் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆய்வுப் பணிகளில் சர்வே நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு வழங்கப்படும். மதிப்பீடு பெறப்பட்ட பின் அதற்கான அரசிடம் பெற்று நிறைவேற்றப்படும்." என்றார்.