ஆழ்வார்திருநகரி; ஆழ்வார் திருநகரியில், சுவாமி நம்மாழ்வாருக்கு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, நீராஞ்சனம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
ஆழ்வார்திருநகரி, ஆதிநாதர் கோயிலில் மாசித் திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாசி விசாக நட்சத்திரம். இந்த நாளில்தான் நம்மாழ்வார் திருமேனி நமக்கு கிடைத்தாக ஐதீகம். இந்த நாளை போற்றும் வகையிலும், மாசித் தெப்பத்திருவிழா நிறைவு நாளான நேற்றுமுன்தினம் தீர்த்தவாரி நடந்தது. காலையில் கோயிலிருந்து புறப்பட்ட சுவாமி நம்மாழ்வார், வீதி உலா வந்து தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.அங்கு, ஆழ்வாருக்கு பக்தர்கள் நீராஞ்சனம் ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் சம்பிரதாய முறைப்படி திருமஞ்சனம் நடைபெற்று, தொடர்ந்து கோஷ்டி நடைபெற்று, ஈரவாடை தீர்த்தம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆழ்வார், தாமிரபரணி நதிக்கரைக்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு தீர்த்தவாரி நடந்தது. பின்னர் மண்டபத்திற்கு எழுந்தருளிய ஆழ்வாருக்கு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. நேற்று, ‘இரட்டை திருப்பதி’ என்று அழைக்கப்படும், தொலைவில் லிமங்கலத்தில் எழுந்தருளி திருமஞ்சனம், கோஷ்டி சாத்துமுறை, இரவு பல்லக்கில்சுவாமி நம்மாழ்வார் வீதி உலாவும் நடந்தது.