பசுவை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை; சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி அருளுரை



டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், அங்கு பல்வேறு அரங்குகளில் அருளாசி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ஆதிசங்கரர் பசுவை தாயாக பாவிக்கிறார்; அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். உயிர் கொடுத்து பேணும் தாய் என்ற சொல்லுடன் பசுக்கள் தனித்துவமாக இணைக்கப்படுகின்றன.


தாய் என்ற சொல்லே தெய்வீகத்தன்மை படைத்தது. மனித உறவுகளில் மிகவும் உன்னதமான உயர்வான உறவு. எந்த மனிதனுக்கும் வேறு எந்த உறவு இருக்கிறதோ இல்லையோ, தாய் என்ற உறவு கட்டாயம் இருக்கும். அது, மனித உலகை தாண்டி, தெய்வீக வடிவங்களுடனும் தொடர்பு உடையது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பசுக்கள் மற்றும் அவற்றின் வர்க்கங்கள் வேளாண்மைக்கு அவசியமானதாக இருந்து வருகின்றன. இதுதவிர, மனிதர்களை பாதுகாக்கும் நீண்டகால பங்கையும் அவை கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் வாழ்ந்து கொண்டிருப்பதில், அதற்கான ஆதாரங்களில் பெரும்பங்கு மாடுகள் வழங்கியது. இதனால், மனித வாழ்வில் பசுக்களின் மறுக்க முடியாத முக்கியத்துவம் வெளிப்படுகிறது. கடந்த ஐந்து தசாப்தங்களாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவை மனித வாழ்வு மற்றும் உணவு உற்பத்தி மீது ஏற்படுத்திய தாக்கமும் இதில் அதிகம். அதில், பசுக்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் பசுக்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு சுவாமி கூறினார். - நமது நிருபர் -:


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்