இன்று கார்த்திகை சந்திர தரிசனம்; மூன்றாம் பிறை தரிசிக்க மனக்கஷ்டங்கள் நீங்கும்!



சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி. மனக்கஷ்டங்கள் நீங்கி, ஆயுள் விருத்தி, செல்வ செழிப்பு உண்டாக  இன்று சந்திர தரிசனம் (மூன்றாம் பிறை) செய்வது சிறப்பாகும். சிவன் தன் தலையின் வலப்பக்கம் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார்.  அமாவாசைக்கு மறுநாளில் இருந்து சந்திரன் வளரும். மூன்றாம் நாளில் தெளிவாக தெரியும். நான்காம் நாளில் இருந்து சந்திரனின் மீது நிழல் விழுவதால், களங்கம் அடைவதாக சொல்வர். மனதில் களங்கம் இல்லாத துாய பக்தி கொண்டவர்களை சிவன், தன் தலையில் வைத்துக் கொண்டாடுவார் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறார். ஆகவே மூன்றாம் பிறை பார்ப்பது நல்லது. மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு. கார்த்திகையில் சந்திர தரிசனம் செய்ய நல்லதே நடக்கும்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்