அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக இறுதி கட்ட பணிகள் : எம்.எல்.ஏ., ஆய்வு



ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் குறித்து எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை 25ம் தேதி துவங்க உள்ளது. விழாவிற்காக இந்து சமய அறநிலையத்துறை 66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதை தொடர்ந்து உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் நன்கொடை மூலம் ரூ.1 கோடி மதிப்பில் விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். கொடி மரம் அருகே தளம் அமைத்தல், மின் விளக்குகள் பொருத்துதல், சுற்றுச்சுவர் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்டவைகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார். இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் பாக்கியராஜ், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், நாகராஜ் குருக்கள், கோவில் எழுத்தர் விமல்ராஜ், ஊர் முக்கியஸ்தர்கள், கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் உடனிருந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்