திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி பாண்டுரங்கன் கோயிலில் மண்டல பூஜை துவங்கியது. கோயிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு யாகசாலை பூஜை முடிந்து மூலவர்கள் ருக்மாயி பாண்டுரங்க சுவாமி, விநாயகர், ஆண்டாள், துர்க்கை, ஆஞ்சநேயர், முருகன், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்களுக்கு பூஜை, தீபாராதனை நடந்தது. 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.