திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் கொடியேற்றம்



திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பின், உற்சவர் திரிபுரசுந்தரி சமேதர் தீர்த்தீஸ்வரர், திரு வீதி உலா வந்து, இரவு சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தனர். வரும், 24ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் விழாவில், காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வருவார். 12 நாட்களும் காலை, மாலை வேதபாராயணம் நடக்கிறது. வரும் 21ம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும், மறுநாள் புஷ்ப பல்லக்கும் நடக்கிறது. வரும், 24ம் தேதி மகா அபிஷேகத்துடன், பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்