பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
கோயிலில் பங்குனி விழாவின் முன்னோட்டமாக பூச்சொரிதல் விழாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் பூத்தட்டுகளை பக்தர்கள் பரப்பி வைத்திருந்தனர். தொடர்ந்து அனைவரும் கோயிலில் பூக்களைக் கொண்டு சேர்த்த பின்னர் நேற்று இரவு 2:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது. மேலும் மூலவருக்கு சந்தன காப்பு நடந்து பல டன் வண்ண மலர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அலங்கரிக்கப்பட்டது. இன்று காலை தீபாராதனைகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் மார்த்தாண்டியம்மன், போத்தி ராஜா, கருப்பணசாமி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பங்குனி விழா மார்ச் 24 துவங்க உள்ள நிலையில் ஏப்.,1 இரவு மின் தீப அலங்கார தேரில் அம்மன் மாட வீதிகளில் வலம் வருகிறார். ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஷ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்துள்ளனர்.