Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் மீனம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் மீனம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கும்பம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்
எழுத்தின் அளவு:
கும்பம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்

பதிவு செய்த நாள்

17 அக்
2020
07:10

அவிட்டம் 3, 4ம் பாதம்:     ராசிநாதன் சனி பகவான் தவிர மற்ற கிரகங்கள் சாதகமாக உள்ளன. வெற்றியைத் தரும் 11ம் இடத்தின் வலிமை கூடுதல் வலு சேர்க்கிறது. நினைத்த செயல்களில் திட்டமிட்டபடி வெற்றி காண்பீர்கள்.  மனதில் இருந்த விரக்தி மறைந்து உற்சாகம் கொள்வீர்கள். பொருளாதார நிலையில் சிரமம் ஏதும் உண்டாகாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  சகோதரரால்  உதவி  கிடைக்கும். ருசியான உணவுகளை உண்பதில் ஆர்வம் கொள்வீர்கள்.  தகவல் தொடர்பு சாதனங்கள் வெற்றிக்கு துணை நிற்கும். குடியிருக்கும் வீட்டினை அழகுபடுத்துவதுவீர்கள். சுபநிகழ்ச்சி நடத்தும் சூழல் அமையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி  திட்டங்களை வகுப்பீ்ர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.  நண்பர், உறவினர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி தரும். பணியாளர்கள் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். சுயதொழில் புரிவோர் அதிக லாபம் காணும் நேரம் இது. கடந்த கால உழைப்பின் பலனை பெறுவீர்கள். தன்னலம் கருதாத செயல்பாடுகள் உங்கள் பெருமையை உயர்த்தும். நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பரிகாரம் : சனிதோறும் சனீஸ்வரர் வழிபாடு
சந்திராஷ்டமம் : நவ.11

சதயம் :  நட்சத்திர அதிபதி ராகு நீசபலம் பெற்றிருந்தாலும் நான்காம் வீடாகிய சுக ஸ்தானத்தில் இருப்பதால் கவலை இல்லை. ராசிநாதன் சனியின் சாதகமான சஞ்சாரம் நன்மையளிக்கும். செயல்களில் வெற்றி காண்பதோடு கவுரவமும் பெறுவீர்கள்.  குருவால் வாழ்வில் பல மாற்றங்களை சந்திப்பீர்கள். பொருளாதார நிலையில் சீரான முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். வேண்டாத விஷயங்களை பேசுவதை தவிர்க்கவும். உடன்பிறந்தோரின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்களால் நன்மை அதிகரிக்கும்.  அண்டை, அயலாரிடம் குடும்பப் பிரச்னைகளை பேச வேண்டாம். பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள். மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. மனைவியின் வேகமான செயல்பாடுகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். விலகிய  நட்புறவு மீண்டும் வந்து சேரும் நேரம் இது. வண்டி வாகனங்களில் இயக்கும்போது கவனம் தேவை. தொழிலில் அதிக முதலீடு தேவைப்படும். கணக்கு வழக்குகளை சரியாக வைப்பது நல்லது. பணியாளர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பை பெறுவர். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக ஈடுபாடு கொள்வர்.

பரிகாரம் : அரசமரத்தடி நாகர் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : நவ. 11, 12

பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: ராசிநாதன் சனி, நட்சத்திர அதிபதி குருவால் பணிகள் எளிதாக நடந்தேறும். தர்ம சிந்தனை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். நினைத்தது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததைக் கொண்டு சிறப்பாகச் செயல்படுவீர்கள். தத்துவ சிந்தனைகள் மனதில் ஊற்றெடுக்கும். குடும்ப பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கருத்துடன் பேசி மற்றவர்களை சிந்திக்க வைப்பீர்கள்.  உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். தகவல் தொடர்பால் நன்மை அதிகரிக்கும். ஆன்மிகவாதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். வாகன பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமிதம் அளிக்கும். மனைவியோடு இணைந்து செய்யும் செயல்கள் வெற்றி பெறும். தொழிலில் திறமையுடன் செயல்பட்டு ஆதாயத்துடன் புகழம் பெறுவீர்கள். பணியாளர்கள் பணியிடத்தில் மேலதிகாரிகள்,  கீழ்நிலைப் பணியாளர்களை ஒருங்கிணைத்துச் செல்வதில் வெற்றி காண்பர். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தினை அடைவர்.  மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் தரும்.
சந்திராஷ்டமம்: நவ. 12

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar