Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கும்பம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் கும்பம் : ஐப்பசி மாத பலனும் ... கார்த்திகை பலன்: மேஷம் கார்த்திகை பலன்: மேஷம்
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை)
மீனம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2020
07:25

பூரட்டாதி 4ம் பாதம் : ராசிநாதனும், நட்சத்திர அதிபதியுமான குருவின் ஆட்சி பலம் பக்கபலமாக இருக்கும். அவருடன் சனி இணைந்து சஞ்சரிப்பதால் சில தடைகளை சந்தித்தாலும் நிதானமாக செயல்பட்டு வெற்றி காண்பீ்ர்கள். சிந்தனைகளில் புதிய மாற்றம் பிறக்கும். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பேச்சில் விவேகம் நிறைந்த கருத்துக்களை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ருசியான உணவு வகைகளை  உண்பதில் ஆர்வம் பிறக்கும். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும்.  தகவல் தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட இடையூறு விலகும். வாகன வகையில் நன்மை காண்பீர்கள். பிள்ளைகளின் வேகமான செயல்பாடு ஒருபுறம் பயத்தை உருவாக்கினாலும் மறுபுறம் பெருமிதம் கொள்ளச் செய்யும். மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. மனைவியுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். நண்பர்களின் துணையுடன் இழுபறியில் இருந்த செயல்கள் முடிவுக்கு வரும். வீண் செலவை குறைக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். அயல்நாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு நல்ல தகவல் வரும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைப்பது உறுதி. பணியாளர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வர். மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம் : ராகவேந்திரர் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : நவ.13

உத்திரட்டாதி : ராசிநாதன் குருவுடன் நட்சத்திர அதிபதி சனியும் இணைந்து பத்தாம் வீட்டில் அமர்ந்து உங்களை கடுமையான உழைப்பிற்கு ஆளாக்குவர். ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்ற கேதுவால் தர்ம சிந்தனை அதிகரிக்கும்.  எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்கும் மனப்பக்குவம் பெறுவீர்கள். நல்லது, கெட்டதை பிரித்தறிந்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவீ்ர்கள். ஆணித்தரமாகப் பேசி மற்றவர் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  பொருளாதார நிலை சீராக உயரும். ஆயினும் நவ.4 முதல் பணவிஷயத்தில் கவனம் தேவை. அடுத்தவர்களை நம்பி கடன் வாங்கித் தரவோ, பொறுப்பேற்கவோ கூடாது. நிலுவை தொகைகளை வசூலிப்பதில் நிதானம் தேவை. வீண் வழக்கு, விவகாரங்களைச் சந்திக்க நேரிடலாம். உடன்பிறந்தோரால் சங்கடமான சூழலுக்கு ஆளாகலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் பயன் தரும். அக்டோபர் மாத இறுதியில் எதிர்பாராத பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. உறவினர் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும்.  ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில்  கவனம் செலுத்துவது நல்லது. மனைவி உங்கள் பணிக்கு உதவிகரமாக இருப்பார்.  பூர்வீக சொத்தால் பிரச்னை வரலாம். பணியாளர்கள் உண்மை உழைப்பால் உயர்வு காண்பர்.  தொழிலில் பேச்சுத்திறமையால் வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம் : துளசிச்செடிக்கு தினமும் நீருற்றுங்கள்.
சந்திராஷ்டமம் : நவ. 13, 14

ரேவதி :    ராசிநாதன் குருவின் ஆட்சி பலமும், நட்சத்திர அதிபதி புதனின் உச்ச பலமும் சிறப்பாக செயல்பட வைக்கும். நவ. 4 முதல் புதனின் எட்டாம் இடத்துச் சஞ்சாரம் தடைகள் உண்டாகலாம். முக்கியமான பணிகளை அதற்கு முன் முடித்துக் கொள்வது நல்லது. எதையும் மேலோட்டமாகப் பார்க்காமல், அலசி ஆராய்ந்து செயலில் இறங்கும் மனப் பக்குவம் உண்டாகும்.  குரு, புதனின் இணைப்பினைப் பெற்றிருக்கும் உங்களுக்கு  புத்தி கூர்மை அதிகரிக்கும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி இருக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். பேச்சில் கண்ணியம் வெளிப்படும். செவ்வாய் வக்ரம் பெற்ற ஜென்ம ராசியில் அமர உள்ளதால் அக். 26 முதல் சம்பந்தமில்லாத பிரச்னையில் கருத்து கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தோரால் சங்கடங்களை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன் தரும் வகையில் அமையும். நவம்பர்  இரண்டாம் வாரத்தில் எதிர்பாராத பயணத்திற்கு வாய்ப்புண்டு. வாகனங்களில் மாற்றம் செய்ய காத்திருப்போருக்கு சாதகமான நேரம். பிள்ளைகளின் செயல்களைக் கண்டு பெருமை கொள்வீர்கள். ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். மனைவியின் ஆலோசனை சரியான நேரத்தில் கைகொடுக்கும். கவுரவத்திற்காக பணச் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் நற்பெயர் காண்பர். சுயதொழில் செய்வோர்  வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம் : அபிராமி அந்தாதி பாடலை பாடுங்கள்.
சந்திராஷ்டமம்: நவ.14, 15

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை) »
temple
அசுவனி டிச. 9 வரை ராசிநாதன் செவ்வாயின் 12ம் இடத்து வாசம் சற்று அலைச்சலைத் தரும். நினைத்த காரியத்தை செய்து ... மேலும்
 
temple
கார்த்திகை 2, 3, 4ம் பாதம்    இந்த மாதத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். மாத துவக்கத்தில் ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3, 4ம் பாதம்    ராசிநாதன் புதனின் சஞ்சாரம் சிந்தனையில் மாற்றத்தை தோற்றுவிக்கும். ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம்     உங்கள் ராசி மீது பார்வையைச் செலுத்தும் குரு மனதில் மகிழ்ச்சியைத் ததும்பச் ... மேலும்
 
temple
மகம் இந்த மாதத்தில் பணிச்சுமை குறையக் காண்பீர்கள். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் தன்னம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.