Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

தனுசு : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் தனுசு : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் கும்பம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் கும்பம் : ஐப்பசி மாத பலனும் ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை)
மகரம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2020
07:23

உத்திராடம் 2, 3, 4ம் பாதம் :     ஏழரைச்சனியின் தாக்கத்தால் தடைகளை சந்தித்தாலும் கடுமையாக உழைப்பீர்கள். குரு, சனி தவிர மற்ற கிரகங்களின் சாதகமான சஞ்சாரம் வளர்ச்சிக்குத் துணை புரியும். மனதில் தேவையற்ற சிந்தனையால் குழப்பம் உருவாகும். எந்த ஒரு விஷயத்திலும் உடனடியாக முடிவெடுக்க இயலாமல் தடுமாறுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி என்பது இழுபறியாகி சிரமத்தை  தரக்கூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனையால் பணிகளின் வேகம் குறையலாம். வசீகர பேச்சால் உங்களின் கவுரவம் உயரும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். பொருளாதார நிலையில் சீரான முன்னேற்றம் காண்பீர்கள்.  கடன் பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்துவீர்கள். உடன்பிறந்தோரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும். பிரயாணம் மூலம் ஆதாயம் காண்பீர்கள். அக்டோபர் மாத இறுதியில் எதிர்பாராத பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின்  பக்கபலமாக செயல்படுவீர்கள்.  உடல்நிலை சற்று பாதிக்கலாம். பணியாளர்கள் மேலதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் பெற போராட வேண்டியிருக்கும். தொழிலில் அலைச்சலைச் சந்தித்தாலும் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும்.மாணவர்கள் படிப்பில் உயர்வு பெறுவர்.  

பரிகாரம் :  நந்தீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : நவ.9

திருவோணம் :     ஏழரைச் சனியால் தெளிவற்ற மனநிலையில் இருப்பீர்கள்.  ஒரு பிரச்னை முடிந்தால் இன்னொரு பிரச்னையை சந்திக்க நேரலாம். எந்த விஷயமும் எளிதில் முடிவடையாமல் இழுபறி நீடிக்கும். ராசிநாதன் சனியின் சஞ்சாரம் பொறுமையின் மகத்துவத்தை கற்றுத் தரும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுங்கள். உங்களின் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு  உதவிகரமாக இருக்கும். பேச்சில் தத்துவ சிந்தனை அதிகமாக வெளிப்படும். குடும்பத்தில் சலசலப்பு இருந்து வரும். பொருளாதாரத்தில் தடை குறுக்கிடும். உடன்பிறந்தோரால் சங்கடத்திற்கு ஆளாகக் கூடும். தகவல் தொடர்பு சாதனங்களை நம்பாமல் முக்கிய பணிகளில் நேரடியாக ஈடுபடுவது நல்லது. முக்கிய ஆவணங்கள், பத்திரங்களை ஞாபகமறதியால் எங்கோ வைத்துவிட்டு தேட நேரிடலாம். அநாவசிய பயணத்தால் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கிடைக்கும். மனைவியின் பிடிவாத செயல்கள் வருத்தம் தரலாம். பணியாளர்கள் அடுத்தவர்களின் பணியையும் சேர்த்து செய்யும் சூழல் வரலாம். தொழிலில் தனித்தன்மையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் கூடுதல் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியம்.

பரிகாரம் : மாரியம்மனை வழிபாடு மகிழ்ச்சி அளிக்கும்.
சந்திராஷ்டமம் : நவ. 9, 10

அவிட்டம் 1, 2ம் பாதம் :    ஏழரைச் சனியால் தடைகளை சந்தித்து வந்தாலும் நட்சத்திர அதிபதி செவ்வாயின் பலம்  தைரியமுடன் செயல்பட வைக்கும். எதற்கும் அஞ்சாமல் செயல்பட்டு வருவீர்கள். முன்பின் தெரியாதவர்களோடு  வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.  மாத துவக்கத்தில் வரவும், மாத இறுதியில் செலவும் அதிகரிக்கும். ஒவ்வொரு செயலையும் அதற்குண்டான விதிமுறையின்படி மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் கறாராக இருப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் மாறி மாறி இருக்கும். பேச்சில் கேலியும், கிண்டலும் நிறைந்த கருத்து வெளிப்படலாம். உடன்பிறந்தோரால் சங்கடமான சூழலுக்கு ஆளாகலாம். வாகனங்களை இயக்கும்போது  எச்சரிக்கை தேவை. அனாவசிய பயணங்களை தவிர்ப்பது நல்லது.  பிள்ளைகளின் ஆலோசனைகள் சமயத்தில் கைகொடுக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. மனைவியுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். சுயதொழில் செய்வோர் போட்டி, பொறாமையை சந்திப்பர். பணியாளர்கள் பல பிரச்னைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை தேவை.

பரிகாரம் : ஸ்கந்த குரு கவசம் படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ. 10

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை) »
temple
அசுவனி டிச. 9 வரை ராசிநாதன் செவ்வாயின் 12ம் இடத்து வாசம் சற்று அலைச்சலைத் தரும். நினைத்த காரியத்தை செய்து ... மேலும்
 
temple
கார்த்திகை 2, 3, 4ம் பாதம்    இந்த மாதத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். மாத துவக்கத்தில் ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3, 4ம் பாதம்    ராசிநாதன் புதனின் சஞ்சாரம் சிந்தனையில் மாற்றத்தை தோற்றுவிக்கும். ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம்     உங்கள் ராசி மீது பார்வையைச் செலுத்தும் குரு மனதில் மகிழ்ச்சியைத் ததும்பச் ... மேலும்
 
temple
மகம் இந்த மாதத்தில் பணிச்சுமை குறையக் காண்பீர்கள். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் தன்னம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.