Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை பலன்: மீனம் ரிஷபம் : தை ராசிபலன் ரிஷபம் : தை ராசிபலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: தை ராசிபலன்
எழுத்தின் அளவு:
மேஷம்:  தை ராசிபலன்

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
03:01

அஸ்வனி: ராசிநாதன் செவ்வாயின் ஆட்சி பலமும் நட்சத்திர அதிபதி கேதுவின் உச்ச பலமும் தொடர்வதோடு ஜீவன ஸ்தானம் வலுப்பெறுவதால் தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றம் காண உள்ளீர்கள். உண்மையாக உழைப்பவர்களுக்கு இந்த உலகம் சொந்தம் என்ற தத்துவத்தை அனுபவ பூர்வமாக உணர்வீர்கள். திறமையான செயல்பாட்டின் மூலம் நற்பலன்களைக் காண உள்ளீர்கள். ராசிநாதனின்  ஆட்சி பலமும் 10ம் இடத்தின் பலமும் உங்கள் உழைப்பின் பெருமையை உலகறியச் செய்யும். தொழில் முறையில் நல்ல முன்னேற்றத்தினைக் காண உள்ளீர்கள். அவ்வப்போது சிறிது மனக்குழப்பத்தினை சந்தித்து வந்தாலும் தொடர்ந்து கடமையைச் செய்து வருவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். தனாதிபதியின் சாதகமான சஞ்சாரத்தின் காரணமாக நிதி நிலைமை முன்னேற்றம் அடையக் காண்பீர்கள். ராசிநாதனின் செவ்வாயின் ஆட்சி பலத்தால் இக்கட்டான சூழலிலும், முக்கியமான பிரச்னைகளிலும் அசாத்திய தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தைரியலட்சுமி உங்களுக்குத் துணையிருப்பாள். உத்யோக ரீதியாக வண்டி வாகனங்கள் மூலம் நல்ல ஆதாயம் காண்பீர்கள்.பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் உயரும். அவர்களின் பெயரில் சொத்துக்கள் சேர்க்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் செயல்கள் உதவிகரமாய் அமையும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உள்ளது. கூட்டுத்தொழிலில் உங்கள் முயற்சியும், செயல்பாடும் அதிக முக்கியத்துவம் பெறும். தொழில் முறையில் கடும் போட்டியினைச் சந்திக்க நேர்ந்தாலும் சரிவரக் கடமையைச் செய்து வருவதன் மூலம் நற்பெயரோடு வெற்றி காண்பீர்கள். கடமையைத் தவறாது செய்து வரும் உங்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரிகள் மூலம் ஒரு சில நெருக்கடிகள் தோன்றினாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.பொதுப்பிரச்னைகளில் உங்களின் செயல்பாடுகள் பெரும் பங்காற்றும். பெரிய மனிதர்களுடனான சந்திப்பு அனுபவங்கள் உங்களை ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுத்தும். தொழில் முறையில் முன்னேற்றம் தரும் மாதம் இது.

பரிகாரம் : நாகாத்தம்மன் வழிபாடு.
சந்திராஷ்டமம் : பிப். 5

பரணி : 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானம் வலுப்பெற்று காணப்படுவதால் செய்யும் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள். வாழ்வியல் நிலையை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் உங்கள் செயல்பாடுகள் அமைந்திருக்கும். சேமிக்கும் முயற்சியில் தடை உண்டாவது போல் தோன்றினாலும் பண வரவு என்பது சிறப்பாகவே இருந்து வரும். செலவுகள் கூடினாலும் மனதில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் சிறுசிறு சலப்புகளுடன் இணைந்தசந்தோஷம்இருந்து வரும். முன்பின் தெரியாத நபருக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மையைத் தரும். வண்டி, வாகனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயனளிக்கும்.எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மனதில் அலைபாயும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். தாயார் வழி உறவினர்களால் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமிதம் கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். உங்கள் சிந்தனைகள் மற்றவர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பினையும், மரியாதையையும் பெற்றுத் தரும்.சிறுசிறு கடன்சுமைகளை தீர்க்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு உறுதுணையாய் இருந்து செயல்படுவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் ஆன்மிகப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உத்யோகஸ்தர்கள் அலுவலக நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் கடும் உழைப்பினை வெளிப்படுத்தி அதற்கான பயனையும் உடனடியாகக் காண்பார்கள். தொழில்முறையில்அடுத்தவர்களுக்கு உதவப்போய் தேவையற்ற பிரச்னையை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. நினைத்த காரியங்களில் வெற்றி காண்பதற்காக நேரம் காலம் பார்க்காமல் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.உழைப்பும், திறமையும் வெளிப்படும் நேரம் இது.
பரிகாரம் : வலம்புரி விநாயகர் வழிபாடு.
சந்திராஷ்டமம் : பிப். 6

கார்த்திகை 1ம் பாதம் : ராசிநாதன் செவ்வாயின்ஆட்சி பலமும் நட்சத்திர அதிபதி சூரியனின் 10ம் இடத்துச் சஞ்சாரமும் இணையும் இந்த நேரத்தில் கடுமையான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். உங்கள் உழைப்பின் பெருமையை மற்றவர்கள் உணருகின்ற வகையில் சம்பவங்கள் நிகழும். மனதில் இருந்து வரும் சஞ்சலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் துவங்கும். உங்களின் சொல்வாக்குகள் செல்வாக்கு பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனாதிபதியின் நிலை பொருள் வரவினை உயர்த்திக் காட்டும். அதிகம் பேசாமல் அமைதியான செயல்பாடுகளின் மூலம் நினைத்த காரியங்களில் வெற்றி கண்டு வருவீர்கள். செவ்வாய் மற்றும் சூரியனின் பலத்தால் சிறப்பாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தோரால் முக்கியமான நேரத்தில் உதவி கிட்டும். வண்டி, வாகனங்கள் தொழில் ரீதியாக மிகுந்த ஆதாயத்தினைத் தரும். திடீர், திடீரென சிறு சிறு பிரயாணங்களைச் சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் கௌரவம் உயரும். இல்லத்தில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக சதா அலைச்சலை சந்தித்து வரும் நீங்கள் அவ்வப்போது உடல்நிலையிலும் சிறிது கவனம் செலுத்துவது நல்லது.நண்பர்களால் லேசான சிரமத்திற்கு ஆளாக நேரும் அதே நேரத்தில் அவர்களின் துணையோடு உங்கள் காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணயின் செயல்பாடுகள் தொழில் ரீதியாக உதவிகரமாய் அமையும். செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றியைக் காண்பீர்கள். தகப்பனார் வழி சொத்துக்களால் ஆதாயம் உண்டு. உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்திற்கு ஆளாவார்கள். வியாபாரிகளின் தொழில் நிலை சிறப்படையும். எதிர்பார்க்கும் தனலாபத்தினை நிச்சயம்அடைவீர்கள். அடுத்தவர்களை நம்பி பொறுப்பேற்றுக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர்கள் ஓய்வின்றி செயல்பட வேண்டியிருக்கும். திடீர் பிரயாணங்கள் சிரமத்தினைத் தந்தாலும் தொழில்முறையில் ஆதாயம் தரும் வகையில் அமையும். கூட்டுத்தொழில் நல்ல தனலாபத்தினைத் தரும். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
பரிகாரம் :தை கிருத்திகை நாளில் விரதமிருந்து சுப்ரமணியரை வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar