Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை பலன்: கும்பம் மேஷம்:  தை ராசிபலன் மேஷம்: தை ராசிபலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கார்த்திகை பலன்: மீனம்
எழுத்தின் அளவு:
கார்த்திகை பலன்: மீனம்

பதிவு செய்த நாள்

15 நவ
2020
08:11


பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாத கிரக நிலை உங்களை வேகமாகப் பணியாற்றச் செய்யும். ராசி அதிபதி, நட்சத்திர அதிபதியுமான குரு நீசம் பெற்ற நிலையில் மாதம் தொடங்குகிறது. என்றாலும் குருவின் 11ம் இடத்துச் சஞ்சாரம் ஏதேனும் ஒரு வகையில் வெற்றியை தரும்.  சம்பந்தம் இல்லாத நபர்களால் வீண் சங்கடங்களை சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளதால் அடுத்தவர் விவகாரங்களைக் கையாளும்போது யோசித்துச் செயல்படவும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். குடும்பத்தினரிடம் பேசும் போது நிதானம் தேவை. நான்குபேர் மத்தியில் அதிகம் பேசாமல் அமைதி காப்பது நல்லது. அண்டை அயலாருக்கு உதவுவதை கவுரவமாக எண்ணுவீர்கள். உறவினர் வழியில் கலகத்தை சந்திக்க நேரிடும். வாகனத்தை மாற்ற நினைப்போருக்கு கால நேரம் கூடி வரும். வாகன சுகம் உண்டு என்பதால் பயணத்தின்போது இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். நரம்புத் தளர்ச்சி, ரத்த சோகை பிரச்னையால் சோர்வு அடைவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் மனதை முற்றிலுமாக புரிந்து வைத்திருப்பார். கவுரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் கூடும். வயது முதிர்ந்த பெரியோருக்கு பணிவிடை செய்வதில் திருப்தி கொள்வீர்கள். குடும்பப் பெரியவர்களின் மனநிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. பணியாளர்கள் மேலதிகாரியோடு கருத்து வேறுபாட்டு கொள்ள வாய்ப்புண்டு. சுயதொழில் செய்வோர் நிதானமாகச் செயல்பட்டு சீரான லாபத்தினை தக்க வைத்துக் கொள்வர். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் முன்னேற்றம் காண்பர். தற்காப்போடு செயல்பட வேண்டிய மாதம் இது.
பரிகாரம் : வியாழன் தோறும் ஸ்கந்த குரு கவசம் படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம் : டிச. 10, 11

உத்திரட்டாதி : ராசி அதிபதி குரு நீச பலம் பெறுவதால் அவ்வப்போது சஞ்சலத்திற்கு ஆளானாலும், நட்சத்திர அதிபதி சனியின் பரிவர்த்தனை யோகம் காப்பாற்றும். விரக்தியான எண்ணங்களை தள்ளி விட்டு சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். செயல்களில்  வேகத்தோடு விவேகமும் இணைந்திருக்கும். எந்த செயலை யாரைக் கொண்டு செயல்படுத்தலாம் என்பதை அறிந்திருப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் முழு ஆதிக்கத்தையும் வெளிப்படுத்துவீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உருவாகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர் குடும்ப விசேஷங்களில் முக்கியப் பங்காற்றுவீர்கள். எதிர்பாராத பயணத்திற்கு வாய்ப்புண்டு.  வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். முக்கிய விஷயங்களுக்கு இடைத்தரகர்களை நம்பாமல் நீங்களே நேரடியாக செயலில் இறங்குவது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பணிகளில் இழுபறி நீடிக்கும். உறவினர் ஒருவரின் சந்திப்பு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும். வேலைக்குச் செல்வோர் தனிப்பட்ட முறையில் தங்கள் செயல் திட்டங்களின் மூலம் மேலதிகாரியிடம் நற்பெயர் காண்பர். சுயதொழில் செய்வோர் கடுமையான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். மாணவர்கள் எழுத்து திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம். பெற்றோருடன் வீண் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு பக்கபலமாக துணைநிற்க வேண்டியிருக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் புதிய பிரச்னை உருவாகக் கூடும். சுறுசுறுப்பு நிறைந்த மாதம் இது.
பரிகாரம் : ஏகாதசி விரதம் நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : டிச. 11

ரேவதி: உங்கள் பணிகள் நிறைவேற அடுத்தவர்களை சார்ந்திருப்பீர்கள். உங்களால் ஆதாயம் அடைந்த பலரும்
உதவ தயாராக இருப்பதால் தயங்காமல் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். நட்சத்திர அதிபதி புதன் நவ. 25 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத இடைஞ்சல்களை சந்திப்பீர்கள். குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பணிகளுக்கு உங்களையே சார்ந்திருப்பர். தனகாரகன் சுக்கிரன் டிச.12 வரை எட்டில் ஆட்சி பலம் பெறுவதால் ஆடம்பர செலவு அதிகரிக்கும். பணவரவு தொடர்வதால் செலவுகளைப் பற்றி கவலை வேண்டாம். அதிகம் செலவழிக்க நேர்ந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதை கவுரவமாக கருதுவீர்கள். அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் விதத்தில் பேச்சு இருக்கும். இதனால் நெருக்கமானவர்களோடு கருத்து வேறுபாடு தோன்றும். உறவினர் வீட்டு விசேஷங்களில் முக்கியப் பங்காற்றுவீர்கள். பயணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்புண்டு. வீட்டில் மராமத்துபணி செய்ய முற்பட்டு அதிக செலவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையலாம். தோள் வலி, கழுத்து வலி, முதுகு வலியால் சிரமப்படுவீர்கள். வாழ்க்கைத்துணையின் பணிச்சுமையைக் குறைப்பதில் துணைநிற்பீர்கள். பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமையை சந்திப்பர்.  சுயதொழில் செய்வோர் கடுமையான உழைத்து வந்தாலும் எதிர்பார்க்கும் இலக்கை அடைய போராட வேண்டியிருக்கும். மாணவர்கள் நண்பர்களோடு இணைந்து படிப்பது நல்லது. பெற்றோரின் ஆலோசனை இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கும். செலவு கூடினாலும் நினைத்ததை முடிக்கும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: டிச. 11, 12

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar