Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலூரில் ஏழு திரைகள் நீக்கி தைப்பூச ... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் தைப்பூச விழா: வாசலிலே நின்று பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் தைப்பூச விழா: வாசலிலே நின்று பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
11:01

தஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழாவில் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்காத நிலையில் கோவில் வாசலில் நின்றபடி தரிசனம் செய்தனர்.
 முருகப்பெருமானின் அறு படை வீடுகளுள் 4-வது படைவீடாக, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 9ம் தேதி கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றப்பட்டது. அப்போது உற்சவர் சுப்பிரமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து, விக்னேஸ்வரர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சகிதமாக உற்சவ மண்டபம் எழுந்தருளின்ர். அன்றிரவு படிச்சட்டத்தில் வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடக்கிறது. விழாவின் சிறப்பம்சமாக 13ம் தேதி இரவு பஞ்சமூர்த்திசுவாமிகள் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான இன்று தைப்பூசத்தை முன்னிட்டு காலை நாலு முப்பது மணிக்கு மூலவரான சுவாமி சுவாமி நாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வைரவேல் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .இன்று மாலை கோவில் உள்பிரகாரத்தில் உள்ள வஜ்ர தீர்த்தத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரியும் அதனைத் தொடர்ந்து இரவு கொடி இறக்கமும் செய்யப்பட உள்ளது. வழக்கமாக தைப்பூசத் திருநாளன்று சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் காவிரி ஆற்றுக்கு புறப்பட்டு அங்கே தீர்த்தவாரி கண்டு அருளும் நிகழும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும் வழக்கம். ஆனால் கொரனா வழிகாட்டு நெறிமுறைகள் நடை முறையில் இருப்பதால் காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது ரத்து செய்யப்பட்டு கோவில் உள்பிரகாரத்தில் எளிய முறையில் தீர்த்தவாரி நடக்கிறது. தமிழக அரசு இன்று கோயில்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இன்று காலை முதல் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை, அவர்கள் கோவில் கோபுரத்தின் அருகே நின்று தரிசனம் செய்து விளக்கேற்றி தங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். ஏராளமானோர் மொட்டை அடித்தும் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர். கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar