வடலூரில் ஏழு திரைகள் நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம்: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2022 10:01
வடலுார்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை, 7:30 மணியளவில், தருமசாலை மற்றும் ஞானசபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், 10:30 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இன்று தைப்பூச தினத்தையொட்டி, காலை, 6:00 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.