பதிவு செய்த நாள்
04
ஆக
2022
07:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயிலில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா விமரிசையாக நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா ஜூலை 23ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று ஆடி திருக்கல்யாண விழா யொட்டி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கரித்த மணமேடையில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க இரவு 7: 55மணிக்கு கோயில் குருக்கள் அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்து, ஆடி திருக்கல்யாணம் விழா விமரிசையாக நடந்தது. பின் மகா தீபாராதனை நடந்தது.இதில் கோயில் தக்கார் பழனிக்குமார், துணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஸ்கார் கமலநாதன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடம் மேலாளர் ஆடிட்டர் சுந்தரம், நிர்வாகி சாச்சா, அக்னி தீர்த்தம் புரோகிதர்கள் நலச்சங்க தலைவர் ராமசுப்பிரமணியன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.