மதுரையில் வைகை ஆரத்தி வழிபாடு : வைகை அம்மனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2022 07:08
மதுரை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரையில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் வைகை நதிக்கு ஆரத்தி எடுக்கும் விழா நடந்தது. கங்கை நதியின் புனிதம் காக்கப்படுவது போல் வைகையாற்றையும் மக்கள் பாதுகாக்க வேண்டும் என மன்னார்குடி ராமானுஜ ஜீயர் வலியுறுத்தினார்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரையில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் வைகை நதிக்கு ஆரத்தி எடுக்கும் விழா நடந்தது. மன்னார்குடி ராமானுஜ ஜீயர் பேசியதாவது: வைகையில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்திருக்கிறது. எல்லா ஆண்டும் இதுபோல் ஆரத்தி விழா எடுக்க வேண்டும். கங்கை நதியை நாம் எல்லோரும் புனித நதியாக போற்றுகிறோம். அதன் புனித தன்மை தீர்த்தமாகவும், சர்வரோக நிவாரணியாகவும் உள்ளது.வைகை ஆற்றையும் மக்கள் அது போல் பாதுகாக்க முன் வர வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் வைகை அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சொக்கநாதர் கோயிலில் இருந்து 16 கால் மண்டபம் வழியாக யானைக்கல் தரைப்பாலத்திற்கு ஊர்வலமாக துறவிகள், சன்னியாசிகள்,பல்லக்கில் துாக்கிவந்தனர்.சிவாச்சாரியார்கள் வைகை நதிக்கு பூஜை செய்து தீபாராதனை காட்டினர். சுவாமி ராமானந்தா, சிவயோகானந்தா, வேதாந்தா சுவாமிகள், வெள்ளிமலை சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை சங்க புரவலர்கள் மாரிசெல்வம், தங்கபாண்டியன், முரளி பாஸ்கர், பழனி செய்துஇருந்தனர்.