Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துரியோதனன் துரோணாச்சாரியார் துரோணாச்சாரியார்
முதல் பக்கம் » பிரபலங்கள்
சேரன் செங்குட்டுவன்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஆக
2012
04:08

இந்திய சமூகத்தில் நட்புக்கும் கற்புக்கும் பெரிய மதிப்புண்டு. இந்தியாவின் பெருங்காவியங்களான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் நட்பையும் கற்பையும் போற்றும் முன்னுதாரணப் பாத்திரங்கள் பல உள்ளன. தன் கற்பின் வலிமையால் எமனிடமிருந்து தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்டு வந்த சாவித்திரி கதையை நாம் அறிவோம். தன் நட்பின் வலிமையால் தன் தோழனுக்கும் கயிலாயத்தில் இடம்பெற்றுத் தந்த கதையை அறிவீர்களா? சுந்தரர்- பெருமாக் கோதையார் கதை, நட்பின் பெருமையை மட்டுமின்றி ஆடி மாத சுவாதித் திருநாளின் அருமையையும் பேசுகிறது. சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன் திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர் மேல் தீராக் காதல் உடையவன். அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்கும். சிலம்பொலி நாதம் கேட்டபின்பே மன்னன் அமுதுண்ணுவது வழக்கம்.

ஒருநாள் சேரமான் இறைவனை வழிபடும்போது சிலம்பொலி கேட்க வில்லை. மன்னன் திகைப்படைந்தான் தன் பக்தியில் குறை நேர்ந்துவிட்டதோ! அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ எனக் கருதி, தன் உடைவாளால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான். அப்போது சிலம்பொலி அதிரசேரமான் முன்பு ஈசன் தோன்றி, வருந்தாதே மன்னா! என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான். இன்று அதில் நான் மெய்மறந்துவிட்டேன். எனவேதான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகிவிட்டது என்றார். ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் இத்தகையதோர் சிறப்புமிக்க சிவனடியாரை அறியாது போனோமே என்றெண்ணிய சேரன், தில்லை சென்று அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதியைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான். அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான். சேரன் தனது பூர்வீகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான். அவரது அழைப்பையேற்று வஞ்சிக்குளம் சென்று, சிறிது காலம் அங்கு கோயில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர்.

பின் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம் பாண்டிநாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார். சேரனின் நட்பு அவரை காந்தமென ஈர்த்தது. தன்னைக் காண வந்த சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று. யானைமீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கவுரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள் பல கண்டு வழிபட்டார். சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. தலைக்குத் தலை மாலை என்ற பதிகம் பாடிக்கொண்டிருந்த அவரை, வெள்ளை யானையை அனுப்பி அழைத்துவரும்படி சிவகணங்களுக்கு உத்தரவிட்டார் ஈசன். அமரர்கள் சூழ யானையின்மீது கயிலாயம் சென்ற சுந்தரரின் நெஞ்சம் நண்பனையே நினைத்தபடி இருந்தது. தன் உள்ளுணர்வால் இதையறிந்த சேரமான், சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் கண்டான். உடனே தன் வெண்புரவியில் ஏறியமர்ந்து, அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓத, விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது குதிரை, இருவரும் கயிலையை அடைந்தாலும் காவலர்கள் சேரமானை உள்ளே அனு மதிக்கவில்லை சுந்தரர் இறைவனை அடைந்து அவரை வணங்கி, என் ஆருயிர் நண்பன் சேரமான் வாயிலில் காத்திருக்கிறார் கருணை கூர்ந்து அவரையும் உள்ளே அழையுங்கள் என்று வேண்டி நின்றார். அடியார்க்கு அருளாமல் வேறு யாருக்கு ஈசன் அருளுவான்? சேரனை உள்ளே அனுமதித்ததும் அல்லாமல், இனி நீங்கள் இருவரும் சிவகணங்களுக்குத் தலைவர்களாக இருப்பீர்கள் என அருள் புரிந்தார். இவ்வாறு சுந்தரனுக்கும் சேரமானுக்கும் ஈசன் கயிலாயப் பதவி அருளிய நன்னாள்தான் ஆடி சுவாதித் திருநாள்.

திருவஞ்சிக்குளத்தில் இந்த நன்னாளை ஆண்டுதோறும் பெரிய திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவில் தமிழகத்தினிருந்து நூற்றுக்கணக்கான சிவபக்தர்கள் சென்று கலந்துகொள்வர். விழாவின் முதல் நாள் இரவன்று கொடுங்கலூர் பகவதியம்மன் ஆலயத்திலுள்ள சுந்தரர், சேரமானின் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை செய்து, யானை மற்றும் குதிரை வாகனத்தில் அமரவைத்து மேள தாளங்களுடன் அஞ்சிக்குளத்திற்கு ஊர்வலமாக அழைத்து வருவர். மறுநாள் காலை சுந்தர மூர்த்தி நாயனாருக்கு தமிழக பாணியில் கோலாகலமான குருபூஜை விழா நடைபெறும். மேலும் அன்றைய தினம் அஞ்சிக் குளத்திலுள்ள அத்தனை உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறும். திருவஞ்சிக்குளம் ஆலயம் மட்டும்தான் கேரளத்திலேயே தேவாரச் சிறப்புப் பெற்ற தலமாகும். சுந்தரரால் பாடப்பெற்ற மலைநாட்டுத் தலம் என்ற சிறப்பும் இதற்குண்டு. கேரளாவிலேயே பள்ளியறை பூஜை நடக்கும் ஒரே தலம் இதுவாகும். சேரமானுக்கும் தில்லை சிதம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதால், இத்தலத்தை மேலைச் சிதம்பரம் என்றும் கூறுவர். இவ்வாலயத்தின் கிழக்குக் கோபுரத்தின் அடித்தளத்தில் யானை மீதமர்ந்த சுந்தரர் கோலமும், குதிரைமீதமர்ந்த சேரமான் கோலமும் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.

கயிலையைக் கண்டவர்கள்: சுந்தரமூர்த்தி நாயனாரை சிவனே வெள்ளை யானையை அனுப்பி கயிலைக்கு அழைத்துச் கொண்டார். அவரை தனது வெண்புரவியில் தொடர்ந்து சென்ற சேரமானும் கயிலையை அடைந்தார். இவற்றைக் கண்ணுற்ற அவ்வையார் தானும் விரைவில் கயிலை செல்லும் ஆவலில், பிள்ளையாரை பூஜை செய்ய, பிள்ளையார் தன் துதிக்கையால் அவ்வையாரைத் தூக்கிச் சென்று கயிலையில் சேர்த்தார். வர்களுக்கெல்லாம் முன்னதாக கயிலைக்கு வந்தவர் காரைக்கால் அம்மையார். பேயுருங் கொண்டு தன் தலையாலே நடந்து கயிலை வந்தவரை ஈசன் அம்மையே என்றழைத்து, பின்னர் திருவாலங்காட்டில் தன் நடனத்தைக் காட்டியருளி தன் திருவடி நிழலில் சேர்த்துக்கொண்டார். கயிலையை அடைய அப்பர் பெருமான் உடல் தளர்ந்து பாதம் நோக யாத்திரை மேற்கொண்டபோது. ஈசன் இக்குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுக. அங்கே கயிலாயக் காட்சி தருவோம் எனக் கூறி அவ்வாறே அருளினார்.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar