Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
போதனா குணவதி குணவதி
முதல் பக்கம் » பிரபலங்கள்
துகாராம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2017
17:28

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க வந்தனர். பலர் துகாராமின் சீடர்களாயினர். அதே ஊரில் (தேஹு) இருந்த மாம்பாஜி கோஸாமி என்ற பண்டிதருக்கு துகாராமின் புகழ் கண்டு பொறாமை. விட்டலன் கோயிலின் பின்புறம் மாம்பாஜியின் தோப்பு. ஒருநாள் துகா வீட்டு எருமை அந்தத் தோப்பில் புகுந்து செடி, கொடிகளை மேய்ந்தது. மாம்பாஜி ஆத்திரம் கொண்டு துகாராம் கோயிலை வலம் வர முடியாதபடி முள் செடிகளால் வேலியிட்டார். பஜனை செய்யும்போது இடைஞ்சலாயிருந்த வேலியைப் பிரிக்கச் சொன்னார் துகா. மாம்பாஜி கோபம் கொண்டு, எருமைக்கிருக்கும் புத்தி தானே உனக்கும். நஷ்டமானதை உன் விட்டலனா தருவான் என ஏசி முள்கம்பால் அடித்தார்.

விட்டலா! என் பொறுமையை சோதிக்கிறாயா? மாம்பாஜிக்குப் பாவம் கை சுளுக்கிக் கொண்டிருக்குமே என புலம்பியபடி அபங்கம் பாடினார். இதுகேட்ட மாம்பாஜி, மனம் வருந்தி துகாவிடம் மன்னிப்பு வேண்டினார். தேஹு அருகில் ஆனந்தி என்ற ஊரில் ஞானேஸ்வரர் சமாதி உள்ளது. அகமதாபாதிலிருந்து ஒரு செல்வந்தர் தனக்கு ரத்தின வியாபாரத்தில் லாபம் வந்தால் பத்து ரத்தினங்கள் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டார். அவருக்கு அதிக லாபம் கிடைத்தது. பத்து ரத்தினங்களை ஒரு தேங்காயில் நிரப்பி அரக்கு முத்திரையிட்டு எடுத்து வந்தார். துகாராமிடம் சமர்ப்பி என கட்டளை பிறந்தது. அவ்விதமே செய்தார் தனவந்தர். ரத்தினங்கள் இருப்பதை எவரிடமும் சொல்லக் கூடாதென்பது கட்டளை. ஞானேஸ்வர் சமாதியில் தேஷ்பாண்டே என்ற வித்வான், 18 புராணங்களிலும் சிறந்து விளங்க வேண்டும் என நேர்ந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தார். அவர் கனவில் ஞானேஸ்வரர் தோன்றி, துகாராமிடம் போ என ஆணை பிறப்பித்தார். தேஹு வந்து துகாராமை வணங்கி தன் வறுமை தீர, பிரவசனம் செய்ய வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தார் தேஷ்பாண்டே.

துகாராம் பதினோரு கீர்த்தனைகளை ஓலையில் எழுதி, அதையும் பணக்காரர் கொடுத்த தேங்காயையும் அளித்தார். நானே பாட்டு இயற்றுவேன். வீட்டுக்குக் கொண்டு போய் சட்டினி செய்து சாப்பிடுமளவு பொறுமையில்லை என்று வெறுப்புடன் கூறி, ஓலைகளைத் துகாராமிடமே கொடுத்துவிட்டு, தேங்காயையும் போட்டு விட்டுப் போய் விட்டார். அப்போது சத்ரபதி சிவாஜியின் அரண்மனையில் சமையல்காராக இருந்த கொண்டோபா அங்கு வந்து துகாராமை வணங்கி, பிரசாதத்துக்குக் கையை நீட்டினார். அவர் கையில் அபங்க ஓலைகளையும் தேங்காயையும் கொடுத்தார் துகாராம். தேங்காயை வீட்டில் போய் உடைத்தால் அதில் ரத்தினங்களிருப்பது கண்டு அதிசயித்தார். அன்றோடு அவர் தரித்திரம் தொலைந்தது. ஓலையிலிருந்த அபங்கங்களைப் படித்ததும் ஞானம் பிறந்தது. ராமேஸ்வர பட் என்ற பண்டிதர் பஜனை செய்தால் போதுமென்றால், வேதம் சொல்லி வேள்வி இயற்றுவதேன்? துகாராமின் அபத்தமான கீர்த்தனைகளை ஓடும் ஆற்றில்தான் வீச வேண்டும் என்றார். அதைக் கேட்ட துகாராம், ஓலைச் சுவடிகளை மூட்டையில் கட்டி இந்திராயணி நதியில் எறிந்தார். பிறகு பாண்டுரங்கன் கோயில் சென்று 13 நாட்கள் விரதம் இருந்தார். 13ம் நாள் விட்டலன் அவ்வூர் பக்தர்கள் கனவில் தோன்றி ஓலை மூட்டை இருக்குமிடத்தைக் கூறினார். பக்தர்கள் மறுநாள் காலையில் தக்கைபோல் மிதந்த சுவடி மூட்டையை எடுத்து வந்து துகாராமிடமே கொடுத்து அவர் வருத்தத்தைப் போக்கினர். அதேநேரம் ராமேஸ்வர பட் கிணற்றில் நீர் இறைத்துக் குளித்துக் கொண்டிருந்தார். அந்தத் தண்ணீர் வெந்நீராகி அவர் உடலில் திடீரென கொப்புளங்கள் தோன்றின. காரணம் புரிந்து கொண்ட பட், துகாராமிடம் வந்து மன்னிப்பு கேட்டார். துகாராம் ஓர் அபங்கம் பாட, அவரின் உடல் கொப்புளங்கள் மறைந்தன.

 
மேலும் பிரபலங்கள் »
temple

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 
temple

கைகேயி ஆகஸ்ட் 30,2016

கேகய நாட்டுக்கு வந்த துர்வாசர், அசுவபதி, உன் நாட்டை ஒட்டிய வனத்தில் நான் தவம் செய்ய உத்தேசித்துள்ளேன். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.