Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெங்கமாம்பா ஹாரத்தி! போதனா
முதல் பக்கம் » பிரபலங்கள்
விராதன்
எழுத்தின் அளவு:
விராதன்

பதிவு செய்த நாள்

14 டிச
2016
05:12

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான். சினந்த ராம -லட்சுமணர்கள், அடேய், நில். எங்கே ஓடப் பார்க்கிறாய்? என்று கேட்டபடி வில்லில் நாண் ஏற்றினர். மெல்லியலாள், சீதை உடல் நடுங்குகிறது. நான் பிரம்மாவால் அழியா வரம் பெற்றவன். உங்களுக்கு உயிர்ப்பிச்சை அளித்தேன். பிழைத்துப் போங்கள் என அலட்சியமாய் நகைத்தான் அரக்கன். ராமனின் அஸ்திரங்கள் நெருப்பாய் வர, சீதையைக் கிழே இறக்கி, சூலாயுதத்தை ராமன் நெஞ்சுக்கு எய்தான் விராதன். ரகுநந்தனனின் கணையால் சூலாயுதம் இரண்டாய் பிளந்தது. மலைகளைப் பெயர்த்து வீசினான் விராதன். அவை, பொடி பொடியாய் சிதறி கொடியவன் உடலை ரணமாக்கின. ஒரு விருட்சத்தை வேரோடு பிடுங்கி வீசினான் கொடியவன். நான்கு பாணங்கள் அவற்றை தூள் தூளாக்கின.

முள்ளம்பன்றி போல் உடலில் தைத்த அம்புகளோடு நின்ற விராதன் தேகத்தைச் சிலிர்க்க, அம்புகள் கீழே உதிர்ந்தன. அந்த இடங்களில் குருதி கசிந்தது. இவன் கரங்களை வெட்டி வீழ்த்துவோம் என ராமனும், லட்சுமணனும் அவனது இரு தோள்களிலும் ஏறிக்கொள்ள, அரக்கன் அவர்களோடு ஆகாயத்தில் பறந்து சென்றான். தனித்து விடப்பட்ட சீதை பயத்துடன், அவர்கள் இருவரையும் விட்டு விடு. காட்டில் கணவனையும் மைத்துனரையும் பறிகொடுத்த பாவி என்ற பழிச் சொல்லை என்னால் ஏற்க இயலாது. என்னை உண்டு உன் பசியைத் தணித்துக் கொள். அவர்களை விட்டு விடு எனக் கெஞ்சினாள். இதை சகிக்காத சகோதரர்கள், விராதனை அழுத்திக் கீழே தள்ளி, அவன் தோள்களை வெட்டினார்கள். உதிரம் வெள்ளமாய் பெருகியும் அவன் உயிர் போகவில்லை. இவனைப் புதைத்துவிடலாம் என்று அண்ணல் கூற, குழி வெட்டினார் இளவல். ஸ்ரீராகவன் தன் திருவடியால் அவனைக் குழியில் தள்ள முயற்சிக்க, அவர் திருப்பாதங்கள் பட்டவுடன் விராதன் கந்தர்வனாய் மாறினான்.

ராமா, நான் குபேரனின் பணியாள். என் கடமைகளை அகந்தையால் அலட்சியம் செய்து மதுவுண்டு மயங்கிக் கிடந்தேன். குபேரன் சாபத்தால் அரக்கனானேன். தங்கள் திருப்பாத ஸ்பரிசத்தால் சாபம் நீங்கியது என வணங்கி, யக்ஷ லோகம் சென்றான். சீதையைக் கவர்வதில் ராவணனுக்கு முன்னோடியால் இருந்தவன் விராதன். அனைத்து ஆபரணங்களையும் பூமியில் வீசி எறிந்த சீதா தேவி, சூடாமணியை மட்டும் ஏன் எறியவில்லை? ராவணன் பற்றி இழுத்த கூந்தலில் ஜானகியின் சூடாமணி சிக்கிக்கொண்டது ஒரு காரணம். சூடாமணியை வீச முற்பட, தன் விரல் அவன் மேல் பட்டுவிடுமே என்ற அருவெறுப்பு மற்றொரு காரணம். அதோடு, இன்னொரு விசேஷமும் சூடாமணிக்கு உண்டு. அது, உமாதேவியின் சூடாமணி. பார்வதி - பரமேஸ்வரர்கள் பூலோக சஞ்சாரம் செய்த போது, கவுரியன்னையின் கூந்தலிலிருந்த சூடாமணி பூமியில் விழுந்தது.

ராமனது வாழ்வில் அது முக்கியப் பங்காற்றும் என்றார் சிவபிரான். சீதையின் தோழிகள் அதை எடுக்க முயன்று, தோற்றனர். தோட்டக்காரர்களாலும் முடியவில்லை. சிறுமி வைதேகி அதை எளிதில் எடுத்தாள். இதை கவனித்த ஜனகர், தெய்வாம்சம் பொருந்திய இவளே, இதை அணியத்தகுந்தவள் என்று தீர்மானித்து ஜானகி பரிணயத்தில் அதைப் பரிசாகத் தந்தார். இதன் வரலாற்றைத் தன் பதியிடமும் கூறியிருந்தாள் மைதிலி. சிவனின் அம்சமாகப் பிறந்த அனுமனிடம் சூடாமணியை அடையாளமாகக் கொடுத்தனுப்பினாள் ஜனகவல்லி. இலங்கையை விட்டு சக்தி பிரிந்ததால் தான் இலங்கை எரிந்து சாம்பலானது.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 
temple news

கைகேயி ஆகஸ்ட் 30,2016

கேகய நாட்டுக்கு வந்த துர்வாசர், அசுவபதி, உன் நாட்டை ஒட்டிய வனத்தில் நான் தவம் செய்ய உத்தேசித்துள்ளேன். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar