பதிவு செய்த நாள்
20
செப்
2022
04:09
கமுதி: கமுதி அருகே அபிராமம் கருமாரிஅம்மன் கோயில் 10ம் ஆண்டு புரட்டாசி பொங்கல், பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, பஞ்சகாவிய பூஜை,பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடந்தது. பின்பு ஊர் வளைந்து காப்பு கட்டப்பட்டது.கருமாரி அம்மனுக்கு பால் ,சந்தனம், மஞ்சள், தயிர் உட்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. தினந்தோறும் மூலவரான கருமாரிஅம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். செப். 27ம் தேதி 33 வகையான அபிஷேகம், சக்தி கரகம் எடுத்தல், மாலை அக்னிச்சட்டி, ஆயிரம்கண் பானை, பால்குடம், பூக்குழி இறங்குதல்,சேத்தாண்டி வேடம் மற்றும் முக்கிய நிகழ்ச்சியான கொதிக்கும் எண்ணெயில் பலகாரம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, செப். 28ம் தேதி பொங்கல் வைத்தல், உறியடி விழா, முளைப்பாரி கங்கையில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை கருமாரியம்மன் கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்தனர்.