Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ... பரமக்குடியில் பாஞ்சராத்திர தீப விழா பரமக்குடியில் பாஞ்சராத்திர தீப விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி அருகே கற்செதுக்கு உருவங்கள் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
செஞ்சி அருகே கற்செதுக்கு உருவங்கள் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

09 டிச
2022
04:12

செஞ்சி: செஞ்சி அருகே 4 ஆயிரம் ஆண்டு பழமையான கற்செதுக்கு உருவங்களை வரலாற்று ஆர்வலர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் சிங்கமலை அடிவாரத்தில் குகை ஒன்றில் பாறை கீறல்கள் இருப்பதாக அதே ஊரை சேர்ந்த ரவிச்சந்திரன், சின்னதுரை ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வரலாற்று ஆர்வலர்கள் பாரதிராஜா, சீனுவாசன், பாலமுருகன், பழனிச்சாமி, ராஜா ஆகியோர் அங்கு நேரில் கள ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வில் கண்டு பிடித்த கற்செதுக்கு உருவங்களின் தொகுப்பை பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜனிடம் கொடுத்து ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு பிறகு இது குறித்து கூறுகையில் “இந்த குகைக் சுவற்றில் கால்நடை சமூகம் சார்ந்த உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களில் திமிலுடைய மாடுகளும் அவற்றைச் சுற்றி கையில் எவ்வித ஆயுதங்களும் இன்றி மனிதர்களும் காணப்படுவதால் ஒருவேளை மாடுகளை பிடிப்பது போன்ற அணுகு முறையில் செதுக்கப்பட்டிருக்கலாம். வேட்டை சமூகம் கால்நடை சமூகமாக மாறும் போது வனத்திலுள்ள மாடுகளை பிடித்து பழக்கப்படுத்துவது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கற்செதுக்குகளும் அதுபோன்ற ஒரு நிகழ்வை நினைவு கூற உருவாக்கப்பட்டிருக்கலாம். மேலும் இங்குள்ள மனிதர்கள் மாடுகளை பிடிப்பது போன்ற கை பாவனையோடு காணப்படுவதால் இன்றைய ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு விளையாட்டுகளுக்கு ஒத்தநிகழ்வாக இவற்றை கருதலாம். நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் மற்றும் மதுரை அருகேயுள்ள அணைக்கட்டி பாறையோவிங்களிலும் இங்குள்ளதை போலவே மாடுகளைப் பிடிக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. இம்மலையின் தென்மேற்கு பகுதியிலுள்ள செத்தவரை அய்யனார் மலையிலுள்ள பாறை ஓவியங்களிலுள்ள காளைகளைப் போன்றே இங்கும் செதுக்கப்பட்டுள்ளன. இக்கற்செதுக்கு உருவங்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம், இது போன்ற செதுக்கு உருவங்கள் வெகுசில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளது என்பதால் இந்த இடத்தை பாதுகாப்பதோடு, சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்களை பெறலாம்”என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar