Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை மற்றும் ஆரியங்காவில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்! சபரிமலை மற்றும் ஆரியங்காவில் நாளை ... இறைவன் கொடுத்த இயற்கை: மலையை (பாது)காக்கும் மனிதர்கள்! இறைவன் கொடுத்த இயற்கை: மலையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படிதான்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 டிச
2012
13:42

ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரணன். முரன் கிளர்ந்தெழுந்தான், அமரர் சிதறினர், இறைவனும்  ஆற்றலிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான். முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம் இறைவன் திருமேனியினின்று கன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட முரனுக்கு முன்னின்றாள். முரன் முடிந்தான். கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பட்ட சக்தி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது.

என் பகவானை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான் அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள். பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆகவேண்டும் , திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதசி தோன்றியது,

வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு அறிய..

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா (பிப்.,12) கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவையொட்டி, காலை மற்றும் மாலை ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே மண்ணுக்குள் புதையுண்ட சர்வரோக நிவாரண தீர்த்தம் 49 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, செம்பாக்கம், லலிதா திரிபுரசுந்தரி மூலிகையம்மன் கோவிலில் (பிப்.,12 ), ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2016 www.dinamalar.com. All rights reserved.