பாண்டுரங்கன் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2026 05:03
திருப்பரங்குன்றம்; ஹார்விபட்டி பாண்டுரங்கன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முதல்கால யாக சாலை பூஜை துவங்கியது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் மூலவர்களுக்கு புதிய விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்து, மூலவர்கள் ருக்மாயி பாண்டுரங்க சுவாமி, விநாயகர், ஆண்டாள், துர்க்கை, ஆஞ்சநேயர், முருகன், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், பரிவார தெய்வங்களுக்கு 11 யாக சாலைகள் அமைக்கப்பட்டு நேற்று பூஜை துவங்கியது. இன்று காலை இரண்டாம் காலையாக சாலை பூஜையும், இரவு மூன்றாம் காலையாக சாலை பூஜை நடந்தது. நாளை காலை 8:30முதல் 9:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.