Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ...  திருநள்ளார் கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா; பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடு  திருநள்ளார் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார பேரணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார பேரணி

பதிவு செய்த நாள்

05 மார்
2026
07:03

 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்புக்கு நடந்த பேரணியில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி, கன்னியாகுமரி மாவட்டம், சுவாமி தோப்பில் உள்ளது. அவரது, 194ம் அவதார தினத்தை ஒட்டி நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சுவாமி தோப்புக்கு பேரணி புறப்பட்டது. இதற்காக அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்று, திருச்செந்துார் கடற்கரையில் இருந்தும், திருவனந்தபுரத்தில் இருந்தும் புறப்பட்ட வாகன பேரணிகள், நேற்று முன்தினம் இரவு, நாகராஜா திடல் வந்தடைந்தன. அங்கு நடந்த மாசி மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து பேரணி புறப்பட்டது. இதற்கு, பையன் ஸ்ரீராம் தலைமை வகித்தார். பையன் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். பூஜிதகுரு பால ஜனாதிபதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. காவி உடை அணிந்த பக்தர்கள், காவிக்கொடி ஏந்தி, ‘அய்யா சிவ சிவ அரகர அரகரா’ என்று கோஷமிட்டனர். மேலும் சிலர் சந்தனக் குடம் ஏந்தியும், கோலாட்டம் ஆடியும் பேரணியில் சென்றனர். கோட்டார் சந்திப்பில் வந்த பேரணிக்கு, சவேரியார் சர்ச் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரி கிணற்றின் கரையை சுற்றி வந்த ஊர்வலம் மதியம் தலைமை பதியை வந்தடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்களுக்கு குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன.சுவாமிதோப்பு, நேற்று பக்தர்களால் நிறைந்து காணப்பட்டது. முத்திரி கிணற்றில் குளித்து பக்தர்கள் குடும்பத்தோடு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar