Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீ.சத்திரம் மாரியம்மன் கோவில் ... சபரிமலை கோவிலில் இன்று மண்டல பூஜை! சபரிமலை கோவிலில் இன்று மண்டல பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சம்போ மகா தேவா: ஆடவல்லானின் ஆருத்ரா தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 டிச
2012
03:12

சிவாலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதியில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நடராஜருக்கு பஞ்சசபைகள் உள்ளன. திருவாலங்காட்டில் ரத்தினசபை, சிதம்பரத்தில் பொன்னம்பலம், மதுரையில் வெள்ளியம்பலம், திருநெல்வேலியில் தாமிர சபை, குற்றாலத்தில் சித்திர சபை ஆகியவற்றில் நடராஜர் திருநடனம் ஆடுகிறார். மார்கழி, திருவாதிரை நட்சத்திரத்தின்று இவர் ஆருத்ரா தரிசன திருவிழா காண்கிறார். இந்த திருவிழாவை நடத்துவது, ஒரு பெண்மணியின் பதிபக்திக்காக என்பது உங்களுக்குத் தெரியுமா!

காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சாதுவன் பெரிய பணக்காரன். அவனது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில் நடந்த நாடகத்திற்குச் சென்றான். நாடகத்தில் நடித்த நடிகையுடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவரிடமிருந்து பொருளைக் கறந்த நடிகை ஓடிவிட்டாள். தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்குக் போகவில்லை. மீண்டும் சம்பாதிக்கத் திட்டமிட்டான். அப்போது, வங்கதேசத்திலிருந்து வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களிடம் வியாபார நுட்பங்கள் குறித்து பேசினான். அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப் போனது. தங்களுடன் அவனை பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் புயலில் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கி விட்டது. வியாபாரிகளை முதலைகள் விழுங்கி விட்டன. சாதுவன் மட்டும் எப்படியோ தப்பித்து, பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டான். கணவன் எந்த இடத்தில் இருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம். அதன் பலனாக, சாதுவன் கரை ஒதுங்கினான்.  சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கியதும் செய்தி ஆதிரையை எட்டியது. தன் கணவன் இறந்துவிட்டான் என முடிவு செய்த ஆதிரை அழுது புலம்பினாள். தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள். இறைவா! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும், என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்.  ஆனால், கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை. அவளுடைய கற்புத்தீ தான் எரியும் நெருப்பைச் சுட்டது. தனக்கு ஏதும் நேராததால் ஆதிரைக்கு வருத்தம் உண்டானது. அப்போது வானில் அசரீரி ஒலித்தது. ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும் வருவார், என்றது.

இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனை அந்நாட்டு அரசரிடம் காவலர்கள் ஒப்படைத்தனர். அவரிடம் தன் கதையை சாதுவன் எடுத்துச் சொன்னார். அரசர் உண்ணக் கொடுத்த மாமிசம், கள் ஆகியவற்றை சாதுவன் ஏற்றுக் கொள்ளவில்லை.  அரசர் சாதுவனிடம்,நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தான் கடவுள் மதுவையும், மாமிசத்தையும் படைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ஏன் சாப்பிட மறுக்கிறாய்?, என்று கேட்டார்.
 சாதுவன் ஏற்கனவே மது, மாதுவிடம் சிக்கி வருந்தியவன் அல்லவா?  அவன் அரசரிடம்,உயிர்களைக் கொல்லக்கூடாது. மாமிசம் உண்பது கூடாது. இலை, காய்கறி, கனிவகை, தானியம், கிழங்கு ஆகிய உணவுகளை நமக்காக வழங்கியுள்ளார். இந்தபிறவியில் ஒரு ஆட்டைக் கொன்றால் அந்த ஆடு அடுத்த பிறவியில் நம்மைக் கொல்லும்! கள் குடிப்பதால் சண்டைகள் உருவாகி அது கொலையில் முடியும், என்று எடுத்துக் கூறினான். இதைக்கேட்ட மன்னர் மனம் திருந்தினார்.  சாதுவனை அவனது சொந்த ஊருக்கு ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தார். ஊர் திரும்பிய சாதுவன் மனைவியுடன் கூடி வாழ்ந்து மகிழ்ச்சி அடைந்தான்.  அவளது கற்புத்திறனை பாராட்டிய சிவன், அவளை வானமண்டலத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கச் செய்தார். அதை தனது நட்சத்திரமாகவும் ஏற்று, அந்த நாளில் ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு பரவசமூட்டுகிறார்.

திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம்!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar