பதிவு செய்த நாள்
25
ஏப்
2024
05:04
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து சென்றது அம்மன் தேர்.
உடுமலை மாரியம்மன் கோயிலில்இந்தாண்டு தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு வகை வண்ண மலர்களால், வே தமந்திரங்கள் முழங்க, அம்மனுக்கு பூச் சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. தேர்த்திருவிழாவில் நேற்று 24ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு, மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், இன்று 25ம் தேதி நடைபெற்றது. முன்னதாக காலை, 6:45க்கு, அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அம்மன் மற்றும் தேரை வழிபட்டனர். தொடர்நது, மாலை, 4:00 மணிக்கு, தேரோடும் வீதிகளில் திருத்தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். நாளை 26ம் தேதி, அம்மன் ஊஞ்சல் உற்சவம், பரிவேட்டை, வான வேடிக்கை என, ஏப்.,27 வரை தே ர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், தினமும் ஆன்மிக நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.