Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று ராமானுஜர் அவதார உற்சவம்! ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று ... காலம்... காலமாக அருள்பாலிக்கும் வீரபாண்டி கவுமாரியம்மன்! காலம்... காலமாக அருள்பாலிக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயிலில் சாமி பார்க்க முண்டியடிக்கிறீர்களா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 மே
2013
10:42

கோயிலில் விழா நடந்தால், தலையைத் தூக்கிக் கொண்டு "நான் முந்தி,நீ முந்தி என தீபாராதனையைப் பார்க்க முண்டியடிப்பவர்களைப் பார்க்கிறோம். இப்படியெல்லாம் செய்தால் தான் கடவுள் அருள்வாரா என்ன! எங்கும் இருக்கிற கடவுளைக் காண மனம் மட்டும் போதாதா என்ன! ஒரு கதையைக் கேளுங்க!காட்டில், ஒரு முனிவர் குடில் அமைத்திருந்தார். ஒருமுறை, அவ்வழியாக வந்த சிலர் முனிவரைப் பார்த்தனர். அவரது தேஜஸான முகம் அவர்களைக் கவர்ந்தது.குடிலை நோட்டமிட்ட அவர்கள், ""சுவாமி! நீங்கள்  ஒரு ஞானப்பெருங்கடலாக இருந்தும், குடிசைக்குள் ஒரு சுவாமி சிலை கூட வைத்துக் கொள்ளவில்லையே. இது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது, என்றனர்.முனிவர் சிரித்தார்.""நீங்கள் சொல்வது எனக்கு புதிராக உள்ளது. இந்தக் குடிசைக்குள் ஒருவர் மட்டுமே தங்க முடியும். இரண்டாவது நபருக்கு இங்கு இடமில்லை, என்றார்.வந்தவர்களுக்கு அவரது பதில் புரியல்லை. தங்களுக்குள்,"" இவர் ஏதோ பைத்தியம் போல் தெரிகிறது. அளவுக்கதிகமாக தியானம், ஆன்மிகப்பயிற்சிகள் எடுத்து மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது போலும்! இவரிடம் இனியும் பேசி பயனில்லை. நாம் கிளம்பலாம், என சென்று விட்டனர்.சில ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் அவர்கள் அந்தப்பக்கமாக வந்து, முனிவரை வணங்கினர். "இப்போதாவது அவருக்கு பைத்தியம் தெளிந்திருக்கிறதா என பார்க்கலாம் என்று பேச்சுக்கொடுத்தனர்.ஆனால், வந்தவர்களுக்கே பைத்தியம் பிடிக்கும் அளவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த பக்தர்கள் தங்களுடன் ஒரு சிலையை எடுத்து வந்திருந்தனர்.""சுவாமி! இந்த சிலையை உங்கள் குடிசையில் வைத்துக் கொள்ளுங்கள். வழிபாட்டுக்கு உதவும், என்றனர்.முனிவர் அவர்களிடம்,"" நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே! இந்தக்குடிலில் ஒருவர் தான் தங்க முடியும். இங்கே இறைவன் ஏற்கனவே குடியிருக்கிறான். நான் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, என்றார்.வந்தவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர். ""சுவாமி! அங்கே எந்த சிலையும் இல்லை. நீங்களும் உயிருடன் இருந்துகொண்டே இறந்து விட்டதாகச் சொல்கிறீர்கள்? தெளிவாகப் பேசுங்கள். இல்லாவிட்டால், எங்கள் தலையே வெடித்து விடும், என்றனர்.முனிவர் அவர்களை அமைதிப்படுத்தினார்.""நான் இறந்து விட்டதாக குறிப்பிட்டது, எனது உடலை அல்ல. எனக்குள் இருந்த"நான் என்ற எண்ணம் இறந்து போனது. "நான் என்ற எண்ணம், எப்போது மனதில் இருந்து விடுபடுகிறதோ, அப்போதே அந்த மனதை இறைவன் நிரப்பி விடுவான். எனவே, அவன் என் மனதில் நிறைந்திருக்கிறான். தூணிலும், துரும்பிலும் குடியிருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்தக் குடிலுக்குள்ளும் அவன் நிறைந்திருக்கிறான். உருவமற்ற நிலையில், அவன் எங்கும் நிறைந்திருக்கும் போது, இந்த சிலையை வைத்தால் தான், அதற்குள் அவன் எழுந்தருள்வான் என்பதை ஏற்க முடியாது, என்றார். பார்த்தீர்களா! கடவுள் எங்கும் இருக்கிறார். அவரை நெஞ்சில் நிரப்பிக் கொண்டாலே போதும். நம்மோடு எப்போதும் இருப்பார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நாளை காலை 9:50 மணிக்கு மேல் காலை 10:14 ... மேலும்
 
temple
அழகர்கோவில்: அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10ம் ... மேலும்
 
temple
மதுரையில்: சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் அவதரித்தவர் கிருஷ்ண பக்தர் சூர்தாஸர். ... மேலும்
 
temple
பாரம்பரியமிக்க கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய, உயர் நீதிமன்ற பரிந்துரையை ஏற்று, ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.