அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பரிவேட்டை; நான்கு ரத வீதிகளில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2024 10:04
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பரிவேட்டை நடைபெற்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா 11ம் நாளில் ஸ்ரீ சந்திரசேகர பெருமான் மற்றும் ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் பரியில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.