பதிவு செய்த நாள்
11
பிப்
2015
05:02
வாழ்க்கை வாழ்வதற்கே என கருதும் கடக ராசி அன்பர்களே!
ராகுவால் நன்மை அதிகரிக்கும். பிப். 17ல் சுக்கிரன் இடம்மாறினாலும் நன்மையைத் தொடந்து தருவார். புதன் மார்ச் 3க்கு பிறகு சாதகமான இடத்திற்கு வருகிறார். கடந்த மாதத்தை விட நற்பலன் கூடும். பணப்புழக்கத்திற்கு எந்த குறையும் இருக்காது. வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அனுகூலமான காலகட்டமாக அமையும். குடும்பத்தில் மார்ச் 3 வரை விட்டுக் கொடுத்துப் போகவும். அதன் பிறகு நன்மை மேலோங்கும். முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். மாதபிற்பகுதியில் விருந்து விழா என சென்று வருவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பிப்ரவரி 15,16 மார்ச் 14ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். பணியாளர்கள் மார்ச் 4 முதல் உயர்ந்த நிலையை எட்டி பிடிக்கலாம். வேலையில் திருப்தியும், நிம்மதியும் காணலாம். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். பிப்ரவரி 23,24ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு வசதி பெருகும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பாராட்டு, புகழ் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு சுமாரான காலகட்டமே. கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் தான் பலன் கிடைக்கும். மார்ச் 3 க்கு பிறகு படிப்பு முன்னேறும். போட்டிகளில் பங்கேற்று பரி” பெறுவீர்கள். விவசாயிகளுக்கு காய்கறி, கீரை, பழவகைகள் நல்ல விளைச்சலைத் தரும். விளை பொருளுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.
வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கலாம்.
பெண்களுக்கு குடும்பச் செலவுக்கு போதுமான பணம் இருக்கும். மாதத் தொடக்கத்தில் குடும்ப பிரச்னை குறுக்கிட்டாலும் பாதிப்பு இராது. பிள்ளைகளின் வளர்ச்சிக்கு துணை நிற்பீர்கள்.
நல்ல நாள்: பிப். 15, 16, 17, 18, 23, 24, 25, 26 மார்ச் 2, 3, 7, 8, 14.
கவன நாள்: பிப்.19, 20 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: வெள்ளை, நீலம்
வழிபாடு: சாஸ்தாவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகனை வழிபட்டு துவரை தானம் செய்யலாம். குலதெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு தழை போடுங்கள்.